அமீரக செய்திகள்

UAE: ஈத் அல் அதாவை முன்னிட்டு மெட்ரோ, டிராம் நேரங்களை அறிவித்த RTA..!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஈத் அல் அதா விடுமுறையின்போது அனைத்து பொது போக்குவரத்து சேவைகளின் நேரத்தை அறிவித்துள்ளது. ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்களைத் தவிர துபாய் முழுவதும் உள்ள பொது வாகன நிறுத்தம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மெட்ரோ

துபாய் மெட்ரோ ரெட் மற்றும் கிரீன் லைன் நிலையங்கள் ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை செயல்படும்.

நேரங்கள் பின்வருமாறு:

  • வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலை 5 மணி முதல் அடுத்த நாள் 1 மணி வரை.
  • ஞாயிறு, காலை 8 மணி முதல் அடுத்த நாள் 1 மணி வரை.
  • திங்கள், காலை 5 மணி முதல் அடுத்த நாள் 1 மணி வரை.

துபாய் டிராம்

துபாய் டிராம் ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை இயங்கும்.

நேரங்கள் பின்வருமாறு:

  • வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலை 5 மணி முதல் அடுத்த நாள் 1 மணி வரை.
  • ஞாயிறு, காலை 8 மணி முதல் அடுத்த நாள் 1 மணி வரை
  • திங்கள், காலை 5 மணி முதல் அடுத்த நாள் 1 மணி வரை

பொது பேருந்து சேவைகள்

ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை விடுமுறை நாட்களில் பேருந்து நிலையங்கள் செயல்படும்.

  • திங்கள் முதல் வியாழன் வரை காலை 4.30 முதல் அடுத்த நாள் 12.30 வரை
  • வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் அடுத்த நாள் 12.30 மணி வரை
  • சனி முதல் ஞாயிறு வரை காலை 6 மணி முதல் அடுத்த நாள்  1 மணி வரை.

Related Articles

Back to top button
error: Content is protected !!