UAE : அஜ்மானில் இருந்து துபாய்க்கு பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்..!! அஜ்மான் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்த அஜ்மானுக்கும் துபாய்க்கும் இடையிலான பொது பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக அஜ்மானின் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் பயணிகள் அஜ்மானில் இருந்து யூனியன் மெட்ரோ நிலையம், ரஷீதியா மெட்ரோ நிலையம் மற்றும் துபாயில் உள்ள அல் குசைஸ் மெட்ரோ நிலையம் வரை பேருந்தில் செல்லலாம் என்று அஜ்மான் போக்குவரத்து ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளத்தில் அறிவித்துள்ளது. மூன்று இடங்களுக்கும் பேருந்துகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை புறப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவை கிடைக்கும் என்றும் அஜ்மான் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளுக்கு ஒரு நபருக்கு 15 திர்ஹம் என்றும் பயணிகள் தங்களின் பயணத்திற்கு மசார் கார்டுகளை (Massar card) பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கார்டுகளை அஜ்மான் போக்குவரத்து ஆணையத்தின் இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் டாப் அப் செய்து கொள்ளலாம் அல்லது பயணிகள் மசார் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கும், பஸ் டிக்கெட்டுகளை உடனடியாக முன்பதிவு செய்வதற்கும், மசார் கார்டுகளை ரீசார்ஜ் செய்யவும் இந்த அப்ளிகேஷன் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த சேவையைப் பயன்படுத்த விரும்புவோர், தங்கள் மசார் கார்டுகளை அஜ்மானில் இருக்கும் அல் முசல்லா ஸ்டேஷனில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
هيئة النقل بعجمان تعلن إعادة تشغيل خطوط النقل العام إلى دبي بالاتجاهين من اليوم#الإمارات_اليوم pic.twitter.com/DJtU6rEDpU
— الإمارات اليوم (@emaratalyoum) July 19, 2020