அமீரக செய்திகள்

ஜெயிச்சுட்டோம்!! உலகளவில் சாதித்த இந்தியா..!! நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு..!!.

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது. முதலில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்த விண்கலம், படிப்படியாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க ஆரம்பித்தது.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) மாலை சந்திரனின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. சந்திராயன் விண்கலத்தின் இந்த சாதனையை இந்தியாவும், இஸ்ரோ (Indian Space Research Organisation-ISRO) விஞ்ஞானிகளும் கொண்டாடி வருகின்றனர். ஆம், இதுவரை எந்த நாட்டின் விண்வெளி நிறுவனமும் ஆராய முடியாமல் இருந்த நிலவின் தென் துருவத்தை சென்றடைந்த முதல் நாடு இந்தியாவாகும்.

மேலும், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவை அடுத்து இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இஸ்ரோ விண்ணில் செலுத்திய சந்திராயனுக்குப் பிறகு, ரஷ்யாவால் ஏவப்பட்டது  லூனா-25 என்ற விண்கலம், இது சந்திராயனுக்கு முன்னதாக நிலவை அடைந்தது, ஆனாலும்  தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி நொறுங்கிப் போனது.

ஏற்கனவே, 2019 இல் இஸ்ரோ விண்ணில் செலுத்திய சந்திராயன்-2 விண்கலம் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது அதிநவீன AI கருவிகளுடன், பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திராயன்-3 ஐ இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்த மாபெரும் வெற்றியை அடைய இஸ்ரோ, படிப்படியாக விண்கலத்தை தரையிரக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், முதலில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தி, பின்னர் நிலவின் தென்துருவத்தை நெருங்கும்போது விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, இறுதியாக, விண்கலம் தரையிறங்குவதற்கு பாதுகாப்பான பகுதியை ஆராய்ச்சி செய்து நிதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் தரையிறக்கியுள்ளனர்.

சந்திராயன் -3  பாதுகாப்பாக தரையிறங்கியதும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!