Repatriation : பஹ்ரைனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானம்..!! 290 இலங்கையர்கள் தாயகம் சென்றடைந்ததாக அமைச்சகம் அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் நடவடிக்கையின் கீழ், ஏற்கெனவே பல்வேறு நாடுகளில் இருந்தும் இலங்கை குடிமக்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் இருந்து 290 இலங்கையர்கள் தாய் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மூலம் குடிமக்கள் அனைவரும் இலங்கையில் இருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்லும் முன்பாக கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, மற்ற வளைகுடா நாடுகளான ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்தும் கடந்த வாரம் இலங்கை குடிமக்கள் தாய் நாட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.