அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!! 19ºC வரை குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகும் என்று NCM அறிக்கை…

கடந்த சில நாட்களாக அமீரகத்தின் பரவலான பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், ஆங்காங்கே கிளவுட் சீடிங் செயல்பாடு நடைபெறுவதால் தொடர்ந்து மழைப் பொழிவு பதிவாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி, இன்றைய வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் கிழக்கு நோக்கி சில வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக கிழக்கு நோக்கிய பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக் கூடும் மற்றும் இரவில் ஈரப்பதமான சூழல் இருக்கும் என்று NCM அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை புதன்கிழமையும் காலையில் இதேபோன்ற காலநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் புதன்கிழமை காலை சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் மேகமூட்டம் அல்லது மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று NCM கூறியுள்ளது.

இன்றைய தினம் நாட்டின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான காற்று வீசும், சில சமயங்களில் புத்துணர்ச்சியுடன் வீசுவதையும் குடியிருப்பாளர்கள் உணரலாம்.

குறிப்பாக, அமீரகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 19ºC வரை பதிவாகும் என்றும் நாட்டின் உள் பகுதிகளில் அதிகபட்சமாக 40ºC வரை வெப்பநிலை உயரும் என்றும் NCM அறிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!