VBM5: ஓமானில் இருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!! பயண அட்டவணையை வெளியிட்ட இந்திய தூதரகம்..!!
வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான நாட்களில் இயக்கப்படவிருக்கும் கூடுதல் விமானங்களை ஓமானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூடுதலாக 23 விமானங்கள் ஓமானில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 23 விமானங்களில் 4 விமானங்கள் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்திற்கு செல்ல இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தவிர்த்து இந்தியாவின் மற்ற நகரங்களான திருவனந்தபுரம், டெல்லி, மும்பை, கொச்சி, பெங்களூர், லக்னோ போன்ற நகரங்களுக்கும் செல்லவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விமானங்களின் பயணிக்க விரும்புபவர்கள் இந்திய தூதரகம் வெளியிடும் ஆன்லைன் படிவத்தில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் படிவத்தை சமர்ப்பித்தவர்கள் ஓமானில் உள்ள ரூவி (Ruwi) மற்றும் வட்டாயா (Wattaya) போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய ஏர் இந்தியா அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கர்ப்பிணி பெண்கள், மருத்துவ தேவையுடையவர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.