அமீரக செய்திகள்

“கனவுகளை நனவாக்க உலகின் பாதுகாப்பான இடம் அமீரகம்”… உலக புகழ்பெற்ற ஸ்டீவ் ஹார்வி எக்ஸ்போவில் உரை..!!

எக்ஸ்போ துபாய்க்கு வருகை தந்த உலகப் புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான ஸ்டீவ் ஹார்வே கனவுகளை நனவாக்க உலகின் பாதுகாப்பான இடம் ஐக்கிய அரபு அமீரகம் என்று கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்போ 2020 துபாயில் அல் வாஸ்ல் டோமில் ஹார்வேயைக் காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றும் போது, ​​“அமீரகம் சாத்தியக்கூறுகளின் நிலம். இங்கே உங்களுக்கு வழங்கப்பட்டதை நீங்கள் அனைவரும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள். யாரும் உங்கள் பர்ஸை எடுக்கவோ அல்லது உங்கள் காரைத் திருடவோ இல்லை. உலகம் முழுவதும் அப்படி இருப்பதில்லை. எனவேதான் நான் வருடத்திற்கு நான்கு முறை அமைதியை அனுபவிக்க இங்கு வருகிறேன்” என்று ஹார்வி பார்வையாளர்களிடம் கூறினார்.

மேலும் “உங்கள் கனவுகளை நனவாக்க பாதுகாப்பான இடங்களில் இதுவும் ஒன்றாகும். கனவுகளை நனவாக்க உதவும் அனைத்து சாத்தியக்கூறுகளும் இங்கே இருக்கின்றது”

”உங்கள் கற்பனையை நம்புங்கள். உங்களின் கற்பனையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள் மற்றும் உங்களின் நம்பிக்கை மீதும் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் ஒரே கடவுளின் படைப்பு”  என்று கூறினார்.

தொடர்ந்து “கற்பனைதான் எல்லாமே. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், எக்ஸ்போவில் நீங்கள் எதைப் பார்த்தாலும், யாரோ ஒருவர் இதை கற்பனை செய்திருப்பார்கள். இந்த நகரம் துபாய், அபுதாபி அல்லது ஐக்கிய அரபு அமீரகம் இவை அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறந்த தலைமையால் கற்பனை செய்யப்பட்டது. அவர்கள் அதை கற்பனை செய்து அதை நம்பினர். அதனால்தான் அமீரகம் அவர்கள் நினைத்த அளவில் வந்தது. நீங்கள் பார்க்கும் அனைத்தும் யாரோ ஒருவரின் கற்பனையில் இருந்துதான் வருகிறது.” என்று உரையாற்றினார்.

அத்துடன் எக்ஸ்போ 2020 துபாய் பார்வையாளர்களுடன் தனது குழந்தைப் பருவ வாழ்க்கையின் விவரங்கள் மற்றும் அனுபவங்களை ஸ்டீவ்ஹார்வே பகிர்ந்து கொண்டார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!