IPL விளையாட அமீரகம் வந்த CSK அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று..!! பயிற்சியை ஒத்தி வைத்த CSK அணி..!!
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு IPL T20 கிரிக்கெட் போட்டிக்காக வந்த அணிகளுள் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் 10 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு (அணியில் விளையாடும் வீரர் உட்பட) கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) இந்தியாவில் இருந்து அமீரகம் வந்த CSK அணியானது ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருந்தது. இன்று முதல் தங்களின் பயிற்சியை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த வேளையில் அணியை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சில நாட்களுக்கும் தனிமைப்படுத்தலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் சென்னை அணி தனது பயிற்சியை வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு IPL விளையாடுவதற்கு வந்த அணிகள் அனைத்தும் இந்தியாவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அமீரகத்திற்கு வந்து சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கொரோனாவிற்கு மூன்று பரிசோதனைகள் மேற்கொண்டிருப்பதாகவும் இன்று நான்காவது பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஎனினும் இது குறித்த உறுதியான தகவல்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் சார்பாகவோ அல்லது IPL நிர்வாகத்தின் சார்பாகவோ தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கக்து.