கத்தார்: காலாவதியான விசா அல்லது 6 மாதத்திற்கு மேல் நாட்டிற்கு வெளியே இருக்கும் குடியிருப்பாளர்கள் நாடு திரும்பலாம்.. கட்டணத்தில் விலக்கு..!!
கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றுநோயால் ஏற்பட்ட விமான போக்குவரத்துக்கு தடையின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் தற்போது கத்தார் நாட்டிற்கு வெளியே இருக்கும் குடியிருப்பாளர்களில், குடியிருப்பு விசா கலவாதியானவர்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே தங்கியிருப்பவர்கள் தங்களின் காலாவதியாகியிருக்கும் குடியிருப்பு அனுமதியை புதுப்பிப்பதற்கான கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்று கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு காலாவதியானவர்களை நாடு திரும்ப அனுமதிக்கும் கட்டண விலக்கு பெற்ற நுழைவு அனுமதிகளுக்காக QID களைக் கொண்ட குடியிருப்பாளர்களிடமிருந்து கத்தார் அரசு விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Residents who are outside the country due to the Coronavirus #COVID__19 pandemic are exempted from fees resulting from the expiry of their residence permits or exceeding 6 months stay outside the country.#MoIQatar #YourSafetyIsMySafety #Qatar pic.twitter.com/j5KDTfbxSk
— Ministry of Interior (@MOI_QatarEn) August 6, 2020