குவைத் : காலாவதியான விசாக்களின் செல்லுபடி காலம் ஆகஸ்ட் 31 ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படாது..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!
குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) வரும் ஆகஸ்ட் 31 க்குப் பிறகு குவைத்தில் தங்கி இருக்கக்கூடிய ரெசிடென்ஸ் மற்றும் நுழைவு விசாக்கள் வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு விசா காலம் நீட்டிக்காப்படாது என்று அறிவித்துள்ளது.
கொரோனாவின் பாதிப்பினால் குவைத் நாட்டில் இருக்கக்கூடிய காலாவதியான ரெசிடென்ஸ் மற்றும் விசிட் விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் விசா காலத்தை நீட்டிப்பதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டு அதே போல் அனைத்து விசாக்களும் தானாகவே நீட்டிக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
இந்த விசா கால நீட்டிப்பானது ஆகஸ்ட் 31 ம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறியிருந்த நிலையில், ஆகஸ்ட் 31 க்கு பிறகு இந்த சலுகை காலம் நீட்டிக்கப்படாது என்று குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த மாத இறுதிக்குள் குவைத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் காலாவதியான விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் விசாவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.