அமீரக செய்திகள்

UAE: செப்டம்பர் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தினை ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் விலையானது சற்று குறைக்கப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:

  • சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.58 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.55 திர்ஹமாக சற்று குறைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.47 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.44 திர்ஹமாக சற்று குறைக்கப்பட்டுள்ளது
  • டீசல் : ஆகஸ்ட் மாதத்தில் 2.45 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் செப்டம்பர் மாதம் முதல் லிட்டருக்கு 2.38 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2021 வரை, கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், தொடர்ந்து 11 மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலைகள் மாறாமல் இருந்தன. பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து  எரிபொருள் விலையானது ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது செப்டம்பர் மாதம் குறைக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!