அமீரக செய்திகள்

துபாய் மெட்ரோ பிளாட்ஃபார்ம்களில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் RTA..!!

துபாயில் இருக்கக்கூடிய மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் அங்கிருக்கக்கூடிய பிரபலமான நிறுவனத்தின் பெயரைக்கொண்டோ அல்லது இடத்தின் பெயரைக்கொண்டோ அழைக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது ஐந்து மெட்ரோ நிலையங்களின் பெயர்களானது சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இனி மெட்ரோ நிலைய தளங்களுக்கும் (Metro Station Platform) “தனித்துவமான எண்கள்” ஒதுக்கப்படும் என்றும், மேலும் அவை சென்றடையக்கூடிய நிலையத்தின் பெயர்களால் கூறப்படாது என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

இது குறித்து RTA ரயில் நடவடிக்கைகளின் இயக்குனர் ஹசன் அல் முட்டாவா அவர்கள் கூறுகையில், “மெட்ரோ நிலைய பெயர்களுக்கு பதிலாக குறிப்பிட்ட எண்களைக் கூறுவதன் மூலம் மெட்ரோ இயங்குதளங்களை அழைக்கப்படும் முறையானது மாற்றப்படவுள்ளது. தற்பொழுது இந்த நடவடிக்கை தொழில்துறையின் சமீபத்திய சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்றதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “மெட்ரோ நிலையங்களின் குறியீடுகள் மற்றும் ஆடியோ அறிவிப்புகளையும் ஆணையம் புதுப்பித்து வருகிறது. ஐந்து மெட்ரோ நிலையங்களின் பெயர்களில் சமீபத்திய மாற்றங்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட திட்டத்தின் படி வேஃபைண்டிங் குறியீடுகள் (wayfinding signages) மற்றும் ஆடியோ அறிவிப்புகளின் புதுப்பிப்பு செயல்முறையானது தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரைடர்ஸின் நடமாட்டத்தை எளிதாக்க நிலையங்கள் மற்றும் அவற்றின் தளங்கள் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்க வேண்டியது அவசியம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“ஐந்து மெட்ரோ நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதை முன்னிட்டு கடந்த நவம்பர் 25 முதல் குறியீட்டினை (signage) மாற்றியமைக்க RTA செயல்பட்டு வந்தது. இந்த திட்டம் பிப்ரவரி 2021 முதல் வாரம் வரை தொடரும். நிலையங்களின் பெயரினை மாற்றுவது மெட்ரோ பெயரிடும் உரிமை திட்டத்தை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாகும்” என்று அல் முட்டாவா கூறினார்.

RTA அறிவித்துள்ள மறுசீரமைப்பானது, வெளிப்புற திசை குறியீடுகள் (outdoor directional signs), ஸ்மார்ட் மற்றும் மின்னணு பொது போக்குவரத்து அமைப்புகள் ( smart and electronic public transport systems) மற்றும் மெட்ரோ வண்டிகளில் உள்ள ஆடியோ விளம்பரங்கள் (audio ads onboard the metro carriages) ஆகியவற்றை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய நிலையத்தின் பெயர் – புதிய நிலையத்தின் பெயர்

அல் ஃபஹிதி நிலையம் – ஷரஃப் டி.ஜி.

ஃபர்ஸ்ட் அபுதாபி பேங்க் – உம் அல் ஷீஃப்

நூர் பேங்க் – அல் சஃபா

டமாக் – துபாய் மெரினா

நக்கீல் – அல் கைல்

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!