அமீரக செய்திகள்

‘ஜஸ்ட் ஃபார் யூ’ எனும் புதிய முயற்சியில் குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை..!!

ஷார்ஜாவில் உள்ள சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (Mohap) குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகிறது. நோயாளிகளின் நண்பர்கள் குழுவின் (Patients Friends Committee) ஒத்துழைப்புடன் அமைச்சகத்தின் அல் காசிமி இருதய மருத்துவமனை மையத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள ‘ஜஸ்ட் ஃபார் யூ – Just For U’ எனும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த புதிய முயற்சியின் வாயிலாக சமீபத்தில் 20 இலவச இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக அமைச்சகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திட்டம் குறித்து அல் காசிமி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆரிஃப் அல் நூரியானி கூறுகையில், “சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அதன் தொண்டு மற்றும் சமூக முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளுக்கு தனது ஆதரவைத் தொடர்ந்து அளித்து வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளுக்கு ஆதரவளிக்கவம், அவர்களுக்கு தேவையானதை செய்யவும் அமைச்சகம் ஒருபோதும் தயங்காது” என்று கூறியுள்ளார்.

நோயாளிகளின் துன்பத்தைத் தனிப்பதும் அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குவதுமே இந்த புதிய முயற்சியின் நோக்கம் என்றும் டாக்டர் அல் நூரியானி சுட்டிக்காட்டியுள்ளார்.

தொண்டு பணிகளை மேம்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் நோயாளிகள் நண்பர்கள் குழு மேற்கொண்டுவரும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கும், ஆதரவிற்கும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து மருத்துவர்கள், ஐந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10 நர்சிங் ஊழியர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவக் குழுவால் இந்த இதய அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!