அமீரக செய்திகள்

UAE: கார் இன்ஜினை ஆன் செய்து விட்டுச் சென்றால் 500 திர்ஹம்ஸ் அபராதம்.. வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை நினைவூட்டல்..!!

அபுதாபி காவல்துறை வியாழனன்று, என்ஜின்கள் இயங்கும் நிலையில் கார்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதற்கு 500 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று நினைவூட்டலையும் வழங்கியுள்ளது.

சில குடியிருப்பாளர்கள் கார் இன்ஜினை ஆன் செய்து விட்டு, கன்வீனியன்ஸ் ஸ்டோர்களில் ஷாப்பிங் செய்தல், ஏடிஎம்களைப் பயன்படுத்துதல் அல்லது பிரார்த்தனைகளைச் செய்தல் போன்ற வேலைகளைச் செய்ய வெளியே ஓடுவதால் சில அபாயம் மற்றும் அபராதங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இத்தகைய நடைமுறைகளுடன் தொடர்புடைய கார் திருட்டு அதிகரிக்கும் அபாயத்தையும் அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். பொதுவாக, கோடை காலத்தில் காருக்குள் அதிக வெப்பம் இருப்பதால் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் மற்றும் சில சமயங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தனிநபர்கள் குழந்தைகளை, குறிப்பாக கைக்குழந்தைகளை, ஓடும் வாகனங்களுக்குள் விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனவரி 18 அன்று வெளியிடப்பட்ட ஒரு எச்சரிக்கையில், பார்க்கிங் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மேலும் சாலையில் அதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் வாகனத்தின் இன்ஜின் இயங்கும் நிலையில் விட்டுவிடக்கூடாது மற்றும் காரில் ஓட்டுநர் இல்லாத நேரத்தில் அது நகராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!