அமீரக செய்திகள்

அபுதாபி வாகன ஓட்டிகள் கவனம்: இந்த வார இறுதியில் மூடப்படும் முக்கிய சாலைகள்.. ITC அறிவிப்பு..

அபுதாபியில் இருக்கக்கூடிய முக்கிய சாலைகள் இந்த வார இறுதியில் மூடப்படும் என்று அபுதாபியின் ஒரு பெரிய சாலை மூடப்படும் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலை மூடல் குறித்து தெரிந்து அதற்கேற்றவாறு திட்டமிட அறிவிறுத்தப்பட்டுள்ளது.

அபுதாபியில் டிசம்பர் 17 சனிக்கிழமையன்று நடைபெறும் ADNOC அபுதாபி மாரத்தான் போட்டிக்காக அபுதாபியின் முக்கிய சாலைகள் மூடப்படும் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் அறிவித்துள்ளது. ADNOC அபுதாபி மராத்தான் போட்டியானது 20,000 பங்கேற்பாளர்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புதிய மராத்தான் பாதையானது அபுதாபியின் சில முக்கிய அடையாளங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையானது, ADNOC தலைமையகத்தின் முன் தொடங்கி அல் பதீன் பேலஸ், ஷேக் சையத் கிராண்ட் மசூதி, கஸ்ர் அல் ஹோஸ்ன் மற்றும் வேர்ல்டு டிரேடு சென்டர் அபுதாபி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாரத்தானில் ஓடுபவர்களுக்கு இடமளிப்பதற்காக எட்டு சாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பு மற்றும் சுமூகமான இயக்கத்தை உறுதிசெய்ய இந்த சாலைகள் மூடப்படும் என்று ITC இது குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் சாலைகள் மூடப்படும் நேரங்கள் குறித்த விபரங்கள்:

எமிரேட்ஸ் பேலஸிற்கு அருகிலுள்ள சாலை: நள்ளிரவு 12 மணி- காலை 9 மணி வரை

கார்னிச்: அதிகாலை 2 மணி-மதியம் 1 மணி வரை

பதீன்: அதிகாலை 4.30 மணி- காலை 7.30 மணி வரை

அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட்: அதிகாலை 5 மணி- காலை 9 மணி வரை

ஷேக் சையத் மசூதி அருகில்: அதிகாலை 5.45 மணி- காலை 9.30 மணி வரை

ஷேக் ரயீத் மசூதி சாலை: காலை 6 மணி – காலை 9.50 மணி வரை

சுல்தான் பின் சயீத் தி ஃபர்ஸ்ட்: காலை 6.10 மணி – காலை 11 மணி வரை

அல் வஹ்தா மால் அருகில் இருந்து அல் ஹோஸ்னுக்கு செல்லும் சாலை: காலை 6.15 மணி – 12 மணி வரை

Related Articles

Back to top button
error: Content is protected !!