அமீரக செய்திகள்

தேசிய தின விடுமுறை நாட்களில் இயங்கும் துபாய் மெட்ரோ, பஸ், டிராம் செயல்படும் நேரங்களை அறிவித்த RTA ..!!

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அமீரக தேசிய தின விடுமுறையை முன்னிட்டு பொது போக்குவரத்து செயல்படும் நேரங்களையும் அதன் சேவை மையங்கள் செயல்படும் நேரங்களையும் அறிவித்துள்ளது. மேலும், வரவிருக்கும் விடுமுறை நாட்கள் முழுவதும் துபாயில் உள்ள அனைத்து கட்டண பார்க்கிங் இடங்களிலும் இலவசமாக வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

துபாய் மெட்ரோ செயல்படும் நேரம்

> ரெட் லைன்: காலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
> க்ரீன் லைன்: காலை 5.30 முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை

துபாய் டிராம் செயல்படும் நேரம்: காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை

பொது பேருந்து சேவைகள்

> மெயின் ஸ்டேஷன்ஸ் (கோல்ட் சூக் நிலையம் உட்பட): அதிகாலை 4.25 மணி முதல் 12.29 மணி வரை
> அல் குபைபா நிலையம்: அதிகாலை 4.14 முதல் 12.58 வரை
> துணை நிலையங்கள் (சத்வா நிலையம் உட்பட): அதிகாலை 4.45 மணி முதல் இரவு 11 மணி வரை (சத்வாவிலிருந்து முழுநேரமும் செயல்படும் C01 தவிர)
> அல் குசைஸ் நிலையம்: அதிகாலை 4.31 முதல் 12.08 வரை
> அல் குவோஸ் தொழில்துறை நிலையம்: காலை 5.05 மணி முதல் இரவு 11.35 மணி வரை
> ஜபெல் அலி நிலையம்: காலை 4.58 முதல் இரவு 11.30 வரை
> மெட்ரோ இணைப்பு பஸ் சேவை: ரஷீதியா, எமிரேட்ஸ் மால், இப்னு பதூதா, துபாய் மால் / புர்ஜ் கலீஃபா, அபு ஹெயில் மற்றும் எடிசலாட் அதிகாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.10 மணி வரை

நகரங்களுக்கு இடையேயான பேருந்துகள் செயல்படும் நேரம் (Inter-city buses and commercial coaches)

> துணை பேருந்து நிலையங்கள் (Subsidiary stations): யூனியன் ஸ்கொயர் போன்றவை அதிகாலை 4.25 மணி முதல் இரவு 11 மணி வரை
> வெளிப்புற பேருந்து நிலையங்கள் (External stations): ஷார்ஜாவில் உள்ள ஜுபைல் ஸ்டேஷன் காலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை; காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஹட்டா; மற்றும் அஜ்மான் காலை 5.15 முதல் இரவு 11 மணி வரை.

சேவை மையங்கள் டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பர் 3 வியாழக்கிழமை வரை மூடப்படும். டிசம்பர் 5 சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும். அதே போல், கஸ்டமர்ஸ் ஹேப்பினஸ் சென்டர் டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பர் 3 வியாழக்கிழமை வரை மூடப்படும். டிசம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை முதல் அவை மீண்டும் செயல்பட தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!