அமீரக செய்திகள்

துபாய்வாசிகளின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றும் துபாய் மெட்ரோ…!! வெற்றிகரமாக 13 ஆண்டுகள் நிறைவு..!!

துபாயில் வசிக்கும் பலரது வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளது துபாய் மெட்ரோ. வேலை செய்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட துபாயில் பல்வேறு காரணங்களுக்காக பொது போக்குவரத்தை நாடும் மக்களுக்கு துபாய் மெட்ரோ ஒன்றே சிறந்த வழியாக இருக்கின்றதுதுபாயின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமலும் குறித்த நேரத்தில் விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதால் குடியிருப்பாளர்கள் துபாய் மெட்ரோவையே பெரிதும் நாடுகின்றனர்.

09.09.2009 அன்று துல்லியமாக இரவு 09.09.09 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் துபாய் மெட்ரோவை முதன்முறையாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

துபாய் பொதுப் போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்த துபாய் மெட்ரோ தற்பொழுது தனது 13வது ஆண்டு விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடியது. இதனை நினைவு கூறும் விதமாக ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவரால் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.

அதில், ஐக்கிய அரபு அமீரகம் தனது கனவுகளை ஒருபோதும் கைவிடாது என்பது பற்றிய உத்வேகம் தரும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு துபாய் மெட்ரோ கார்டை முதன்முறையாக ஷேக் முகமது பயன்படுத்தி அதில் பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ஜூலை 2020 இல் ரூட் 2020 திறப்பு விழாவின் போது, ​​மெட்ரோவில் அவர் மேற்கொண்ட மிகச் சமீபத்திய பயணத்தின் கிளிப்புகளும் இதில் உள்ளன.

RTA கூறுகையில்துபாய் மெட்ரோ தொடர்ந்து 13 ஆண்டுகளாக முழு வசதியுடன் துபாயில் உள்ள அனைத்து இடங்களையும் அடைய மிகவும் வசதியான மற்றும் எளிதான வழிஎன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் துபாய் மெட்ரோவானது மொத்த பொதுப் போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கையில் சுமார் 36 சதவீதத்தை கொண்டுள்ளது2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரெட் மற்றும் கிரீன் லைன்கள் இரண்டிலும் பயணித்தவர்களின் எண்ணிக்கையானது 109.1 மில்லியன் ரைடர்களை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் துபாய் மெட்ரோ 9/9/2009 முதல் ஜூலை 2022 வரை 1.9 பில்லியன் பயணிகளுக்கு இதுவரை சேவை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பல குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட பயணங்களுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பொதுப் போக்குவரத்தான துபாய் மெட்ரோ தொடங்கப்பட்ட தேதியிலிருந்து 2020 இறுதி வரை, தனியார் வாகனங்களில் சுமார் ஒரு பில்லியன் பயணங்களை நீக்க உதவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், RTA இன் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமானமட்டர் அல் தாயர் இந்த காலகட்டத்தில் மெட்ரோவானது தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் மேலும் அதன் மூலம் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை 2.6 மில்லியன் டன்கள் குறைக்கவும் உதவி புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!