அமீரக செய்திகள்

UAE: 10 திர்ஹம்ஸுக்கும் குறைவான செலவில் ஈத் விடுமுறையை அனுபவிக்க நான்கு வெளிப்புற நடவடிக்கைகள் இதோ..!!

அமீரகத்தில் ஈத் அல் பித்ர்க்கான நீண்ட வார விடுமுறையை அனுபவிக்க ஏராளமான விருப்பங்கள் உள்ளன. இருப்பினும், நீங்கள் இலவசமாக அல்லது மலிவான விலையில் உற்சாகமான சாகச நடவடிக்கைகளை அனுபவிக்க விரும்பினால், ராஸ் அல் கைமாவில் சில அற்புதமான செயல்கள் உள்ளன.

அதாவது, நீங்கள் உங்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர்களுடன் சேர்ந்து ஈத் விடுமுறையை இலவசமான மற்றும் 10 திர்ஹம்ஸ்க்கும் குறைவாக செலவாகக் கூடிய வெளிப்புற நடவடிக்கைகளில் கொண்டாட நான்கு விருப்பங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு பார்க்கலாம்.

1. ஜெபல் ஜெய்ஸ் வியூவிங் டெக் பூங்கா:

நீங்கள் கடல் மட்டத்திலிருந்து 1,934 மீட்டர் உயரத்தில் இருந்து பிரம்மிப்பூட்டும் காட்சிகளைப் பார்க்க விரும்பினால் ஜெபல் ஜெய்ஸ் வியூவிங் டெக் பூங்காவிற்குச் செல்லலாம். இது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்று வர ஒரு சிறந்த இடமாக அமைகிறது.

நீங்கள் ஜெபல் ஜெய்ஸுக்கு செல்லும் மலைகளைச் சுற்றி 20 கிமீ வளைந்த சாலையில் சென்றால் உயரத்தில் உள்ள பார்வையாளர் தளத்தை அடையலாம். சாலையை கார்கள், 4X4கள், மோட்டார் பைக்குகள் மற்றும் சைக்கிள்கள் மூலம் அணுகலாம்.

நீங்கள் மலையின் உச்சிக்கு சென்றதும், 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான மலைத்தொடரின் அழகிய காட்சியை ஏழு வியூவிங் டெக்கில் இருந்து பார்த்து மகிழலாம். மேலும், அங்கு அமைந்துள்ள கடைகளில் தின்பண்டங்கள் மற்றும் உணவுகளை ருசித்து ஓய்வு நேரத்தை அனுபவிக்கலாம்.

செலவு: இலவசம்

நேரங்கள்:

  • திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை
  • சனி மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை.

2. RAK க்ரீக் – அப்ரா பயணம்:

நீங்கள் வெறும் 10 திர்ஹம்ஸ் செலவில் அமீரகத்தின் பாரம்பரிய அப்ரா படகில் அல்லது வாட்டர் டாக்ஸியில் ராஸ் அல் கைமாவின் சிற்றோடை வழியாக சவாரி செய்யலாம் மற்றும் சதுப்புநிலங்களை ஆராயலாம். படகு உங்களை பின்வரும் நான்கு இடங்களில் ஒன்றிற்கு அழைத்துச் செல்லும்:

  1. கார்னிச் நிலையம் 1
  2. கார்னிச் நிலையம் 2
  3. ஹில்டன் கார்டன் விடுதி நிலையம்
  4. மனார் மால் ஸ்டேஷன்

அப்ராவுக்கான டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி?

நீங்கள் அல் கவாசிம் கார்னிச்சில் அமைந்துள்ள கடல் போக்குவரத்து நிலையங்களுக்குச் சென்று அப்ராவை முன்பதிவு செய்யலாம் அல்லது டிக்கெட்டுகளை வாங்கலாம். பணம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தும் விருப்பமும் அங்கு உள்ளது.

அப்ரா கட்டணம்:

  • ஒரு நிலையத்திற்கு 10 திர்ஹம்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • நீங்கள் நீரோடையைச் சுற்றிலும் 30 நிமிடம் சவாரி செய்ய விரும்பினால் 150 திர்ஹம்ஸ் ஆகும்.
  • 60 நிமிடங்களுக்கு, கட்டணம் 300 திர்ஹம்.
  • இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்.

நேரங்கள்

  • திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை
  • சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை

3. ராஸ் அல் கைமாவின் தேசிய அருங்காட்சியகம்

தேசிய அருங்காட்சியகத்தில் கிமு 5000 முதல் இந்த பிராந்தியத்தில் இருந்த வர்த்தக நாகரிகங்களின் கலைப்பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் எமிரேட்டின் நீண்ட வர்த்தக வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது. ராஸ் அல் கைமா அதன் வரலாறு முழுவதும் தொடர்ந்து மக்கள் வசிக்கும் சில இடங்களில் ஒன்றாகும், இது உலகின் மிக நீண்ட மக்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றாகும்.

  • நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
  • கட்டணம்: ஒரு நபருக்கு 5 திர்ஹம்ஸ் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக நுழையலாம்

4. ஃபிளமிங்கோ கடற்கரை

ஐக்கிய அரபு அமீரகத்தின் மேற்கில் அமைந்துள்ள இந்த கடற்கரையில், ஆழமற்ற கரைகள் மற்றும் நீரோட்டங்கள் இல்லாததால் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. கூடுதலாக, இந்த கடற்கரையில் நடைபாதை, கைப்பந்து மைதானம் மற்றும் பல்வேறு நிழலான இருக்கைகள் உள்ளன.

நீங்கள் கடற்கரையில் ஒரு பார்பிக்யூவை அமைக்கலாம் அல்லது கடற்கரையில் அமைந்துள்ள பல உணவகங்களில் ஒன்றிலிருந்து சூரிய அஸ்தமனம் மற்றும் கடற்கரை காட்சிகளை அனுபவிக்கலாம்.

செலவு: இலவசம்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!