UAE: காலாவதியான வாகனப்பதிவு உரிமத்தைப் புதுப்பிக்க மூன்று மாத கால அவகாசம்..!! அஜ்மான் காவல்துறை தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானில் காலாவதியான வாகன பதிவு உரிமத்தைப் (vehicle registration license) புதுப்பிக்க விரும்பும் நபர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க அஜ்மான் காவல்துறை முடிவு செய்துள்ளது.
2017 ஆம் ஆண்டின் 178 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம், ஆர்டிகிள் எண் 25 ன் படி, “காலாவதியான பதிவு உரிமத்துடன் வாகனம் ஓட்டினால், 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு, விதிமீறல் புரிந்த நபரின் ஓட்டுநர் உரிமத்தில் கூடுதலாக நான்கு கரும் புள்ளிகள் (black points) சேர்க்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தின் பதிவு உரிமம் காலாவதியாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்டால், அந்த வாகனம் ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
இந்நிலையில், அஜ்மான் காவல்துறை அதிகாரி ஒருவர், காலாவதியான வாகன பதிவு உரிமத்தைப் புதுப்பிக்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர் என்றும், இந்த கால அவகாசத்திற்குள் வாகனத்தின் பதிவு உரிமத்தைப் புதுப்பிக்க தவறினால், 2017 சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்கு விதிமுறைகளைப் பின்பற்றவும், சரியான நேரத்தில் வாகனப் பதிவைப் புதுப்பிக்கவும் வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.