அமீரக செய்திகள்

அமீரகத்தின் புதிய விசா மாற்றங்கள் குறித்து துபாய் டிராவல் ஏஜென்ட் கூறுவது என்ன..? சிறப்பு வீடியோ காணொளி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த விசா முறைகளை புதுப்பித்து புதிய விசா நடைமுறைகளை அமீரக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இம்மாதம் அக்டோபர் 3 ம் தேதி முதல் அமீரக அரசு அறிவித்த இந்த புதிய விசா முறைகள் அனைத்தும் தற்போது நடைமுறைக்கும் வந்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விசா நடைமுறைகள் 2022 ன் படி, புதிய என்ட்ரி பெர்மிட் வகைகள், விசிட் விசாக்களில் மாற்றம் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அமீரக அரசு வெளியிட்டிருந்தது. அதே போன்று, புதிய விசா முறைகளில் ஒன்றாக, 90 நாட்கள் விசிட் விசாக்களை ரத்து செய்வதாகவும், அதற்கு பதிலாக 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய விசாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அபுதாபி மற்றும் ஷார்ஜா அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இருப்பினும், இந்த புதிய விசாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், 90 நாட்கள் விசிட் விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அமீரகத்தில் தற்போது விசிட் விசாவில் இருப்பவர்கள் அல்லது இந்தியா போன்ற வேறு நாடுகளிலிருந்து அமீரகத்திற்கு விசிட் விசாவில் வர இருப்பவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நம்மில் பெரும்பாலானோருக்கு பல கேள்விகளும், சந்தேகங்களும் இருந்து வருகின்றது.

அது போன்று அபுதாபி, ஷார்ஜாவில் வழங்கப்பட்ட விசிட் விசா மூலம் அமீரகம் வந்தவர்கள் தங்களின் விசா புதுப்பித்தலை துபாய்க்கு மாற்றிக்கொள்ள முடியுமா..?
விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை கிடைத்தவர்கள் விசிட் விசாவிலிருந்து ரெசிடென்ட் விசாவிற்கு மாற அனுமதி உள்ளதா..? ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் விசா கேன்சல் செய்யப்பட்ட பிறகு அவர்களால் அமீரகத்தில் தொடர்ந்து தங்க முடியுமா..? உள்ளிட்ட பல கேள்விகளும் நம்மில் பலருக்கும் இருக்கும்.

இது மாதிரியான உங்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் துபாய் டிராவல் ஏஜென்ட் நிறுவனர், நேரடி உரையாடலின் மூலம் கலீஜ் தமிழிற்கு அளித்த பதில்கள் கீழே உள்ள வீடியோ தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்று மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அதனையும் தெரியப்படுத்துங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!