வளைகுடா செய்திகள்

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களின் விசாக்கள் இலவச நீட்டிப்பு..!! சவூதி அரசு தகவல்..!!

சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டிற்கு வெளியே சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டிருக்கும் ரெஸிடென்ட் பெர்மிட்டின் செல்லுபடியை சவூதி அரேபிய அரசானது நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் குறிப்பிடுகையில் இந்த விசா நீட்டிப்பானது விசிட் விசாக்களுக்கும் பொருந்தும் என்றும் ஜூன் 2, 2021 வரை கட்டணம் இல்லாமல் தானாகவே விசா நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயின் விளைவுகளை கையாள்வதற்கும் அதன் பொருளாதார தாக்கத்தை குறைப்பதற்கும் நாடு மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் பொது இயக்குநரகம், விசா நீட்டிப்பானது தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் தானாகவே செயலாக்கப்படும் என்றும் இதற்காக சம்பந்தப்பட்ட துறையினை நாட வேண்டியதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்தானது மே மாதம் 17 ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்டது. எனினும், சவூதி தடை விதித்த இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு இந்த தடையானது தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக விடுமுறைக்கு இந்தியா சென்ற இந்தியர்கள் பலரும் ஒரு வருட காலமாக சவூதிக்கு பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!