வளைகுடா செய்திகள்

சுற்றுலா துறையை மேம்படுத்த சவுதியின் அடுத்தகட்ட இலக்கு: 2030-ம் ஆண்டுக்குள் திறக்கப்படும் 320,000 புதிய ஹோட்டல் அறைகள்….

சவுதி அரேபியா அதன் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை சமீப காலமாக மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள ஹோட்டல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நைட் ஃபிராங்க் (Knight Frank) எனும் நிறுவனம் நடத்திய ஆலோசனையின் சமீபத்திய கணிப்புகளின்படி, சவுதியில் 2030 ஆம் ஆண்டுக்குள் 320,000 புதிய ஹோட்டல் அறைகள் சேர்க்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சவுதி அரேபியா வரும் 2030இல் சுமார் 150 மில்லியன் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சவுதி சந்தைக்கு இது தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய ஹோட்டல் அறைகளில் 66 சதவீதம் ‘luxury’, ‘upper upscale’ மற்றும் ‘upscale’ வகைகளில் இருக்கும் என்றும், 2030 ஆம் ஆண்டளவில், இந்தப் பிரிவானது சந்தையின் 72 சதவீதத்திற்கு மேலும் விரிவடைந்து, 251,500 ஹோட்டல் அறைகளுக்குச் சமமாக இருக்கும் என்றும் நைட் ஃபிராங்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில், சவூதி அரேபியா கிட்டத்தட்ட 100 மில்லியன் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. இதனடிப்படையில் நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 6 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகவே, 2030ஆம் ஆண்டின் முடிவில் 10 சதவீத பங்களிப்பை அடைய வேண்டும் என்று இலக்கை நோக்கி இந்தத் துறை பயணிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சவுதியின் புனித நகரங்களைப் பார்வையிட வருகை தரும் மதச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 30 மில்லியனாக இருக்கும் என்றும், இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 50 மில்லியனாக உயரும் என்றும் அரசாங்கம் கணித்துள்ளது.

சவுதியின் முதன்மையான மூல சந்தைகள்

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாட்டின் சுற்றுலாத் துறைக்கான செலவு 87 பில்லியன் சவுதி ரியால்களாக அதிகரித்துள்ளது என்றும், இது 2022 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 132 சதவிகிதம் உயர்ந்ததாகவும் புள்ளி விபரத் தரவுகள் கூறுகின்றன.

அத்துடன் சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 14.6 மில்லியன் என்ற பயணிகளின் எண்ணிக்கையுடன் 142 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பஹ்ரைன் 2.2 மில்லியன் பார்வையாளர்களுடனும், குவைத் 1.9 மில்லியன் பார்வையாளர்களுடனும் மற்றும் எகிப்து 1.5 மில்லியன் பார்வையாளர்களுடனும் சவுதி சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய ஆதார சந்தைகளாக பங்காற்றுகின்றன.

தற்சமயம், சவூதி 2030 ஆம் ஆண்டிற்குள் 150 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்கும் இலக்குடன் சர்வதேச பயணிகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு உத்திகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என்று சுற்றுலாத்துறையின் கூட்டாளரும் விருந்தோம்பல் தலைவருமான துராப் சலீம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக,  நாடு முழுவதும் கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு சலுகைகளை மேம்படுத்துவதுட ஜித்தா F1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் ஏராளமான ‘பொழுதுபோக்கு சீசன்கள்’ போன்ற தற்போதைய ஈர்ப்புகளை நிறைவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரியாத்தில் உள்ள Boulevard World போன்ற புதிய தீம் பூங்காக்கள், கடந்த ஆண்டில் சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தால் (Saudi General Entertainment Authority) 24 கூடுதல் தீம் பூங்காக்களுக்கு உரிமம் வழங்கியது போன்றவை சுற்றுலா துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, ‘2030 World Expo’ ரியாத்தில் நடைபெற உள்ளதால், 94.6 பில்லியன் டாலர்கள் நாட்டின் தலைநகரில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆறு மாத நிகழ்வின் போது 40 மில்லியன் பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!