தமிழகம்: வெளிநாடு செல்பவர்கள் விரைவில் தடுப்பூசி பெற சிறப்பு முகாம்கள்..!! தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் விபரங்கள் உள்ளே…!!

கொரோனா வைரஸிற்கு எதிராக உலகெங்கிலும் தடுப்பூசி மிகத் தீவிரமாக போடப்பட்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாட்டிற்குள் தடுப்பூசி போட்ட பயணிகளையே உள்நுழைய அனுமதி வழங்கி வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இரண்டு டோஸ்களாக போடப்படும் இந்த தடுப்பூசிகளில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸானது முதல் டோஸ் அளித்த 4 முதல் 6 வாரங்கள் கழித்து போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதே போல் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் முதலில் முதல் டோஸிற்குப் பிறகு 6 முதல் 8 வாரங்கள் கழித்து போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு பின்னர் 12 முதல் 16 வாரங்கள் என நீட்டிக்கப்பட்டது.

இந்த கால நீட்டிப்பானது வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலையே ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளால் வெளிநாடு செல்பவர்கள் இரண்டாவது டோஸ் பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை 28 நாட்களுக்குப் பிறகு போட்டுக்கொள்ளலாம் என அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் வெளிநாடு செல்பவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசியின் இரண்டாவது டோஸினைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்பொழுது தமிழகத்தில் 75 தடுப்பூசி மையங்கள் வெளிநாடு செல்பவர்களுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

கல்வி, வேலைவாய்ப்பு அல்லது இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கெடுக்க வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் பெற கீழ்கண்ட நபர்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.