அமீரக செய்திகள்

துபாயில் ஜூன் 1 முதல் இயக்கப்படவிருக்கும் புதிய பேருந்து வழித்தடங்கள்..!!

துபாயில் ஜூன் 1 முதல் ஐந்து புதிய பேருந்து வழித்தடங்கள் திறக்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. அத்துடன் ஒரு வழித்தடம் ரத்து செய்யப்படும் மற்றும் ஆறு வழித்தடங்கள் மேம்படுத்தப்படும் என்றும் RTA தெரிவித்துள்ளது.

புதிய வழித்தடங்கள்

ரூட் 14 : ஆட் மேத்தாவிலிருந்து தொடங்கி அல் சஃபாவுக்குச் செல்லும் இந்த வழித்தடத்திற்கு, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து இயக்கப்படும்.

ரூட் 23 : ஆட் மேத்தாவிலிருந்து தொடங்கி அல் நஹ்தா 1 க்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும்.

ரூட் 26 : ஆட் மெத்தாவிலிருந்து தொடங்கி பிசினஸ் பே பஸ் நிலையம் 2 க்கு 20 நிமிட இடைவெளியில் பீக் நேரம் எனும் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் (வெள்ளிக்கிழமை தவிர) இயக்கப்படும்.

ரூட் F50 : மெட்ரோ இணைப்பு சேவையான இவ்வழித்தடம், துபாய் இண்வெஸ்ட்மென்ட் பார்க் மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கி துபாய் இண்வெஸ்ட்மென்ட் பார்க் காம்பளக்ஸ் 2 க்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சேவையை வழங்கும்.

ரூட் F51 : மெட்ரோ இணைப்பு சேவையான ரூட் F51, துபாய் இண்வெஸ்ட்மென்ட் பார்க் மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கி துபாய் இண்வெஸ்ட்மென்ட் பார்க் காம்ப்ளக்ஸ் 1 க்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து சேவையினை வழங்கும்.

கடைசி இரண்டு வழித்தடங்கள் தேரா மற்றும் பர் துபாய் ஆகிய இரு மத்திய வணிக மாவட்டங்களுக்கு சேவை செய்யும் வகையில் இயக்கப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்படும் வழித்தடங்கள்

ரூட் 20 : வார்சனில் உள்ள ஃப்ளை துபாயின் தலைமை அலுவலகத்திற்கு சேவை செய்ய இந்த வழித்தடம் நீட்டிக்கப்படும்.

ரூட் F09 : ஒரு சுழல்பாதையாக மாற்றப்படும் இப்பாதையானது அல் வாஸ்ல் பார்க்கிற்கு இனி சேவை வழங்காது.

நியூ பிசினஸ் பே 2 பஸ் ஸ்டேஷனிற்கு சேவை செய்ய F 14, F19A மற்றும் F19B வழித்தடங்கள் நீட்டிக்கப்படும்.

ரூட் X 23 : ஆட் மேத்தா ஸ்டேஷனுக்கு பீக் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் சேவையினை வழங்கும். இதன் மூலம் பீக் நேரங்களில் பயண நேரம் மேம்படும் என கூறப்படுகிறது.

மேலும், RTA 28 வழித்தடங்களின் கால அட்டவணையை மாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்த வழித்தடங்களாவன: 20, 61 D, 66, 91, 91 A, 95, C 03, C 05, C 18, E 303, E 306, E 307, E 307 A, F 03, F 09, F 14, F 19 A, F 19 B, F 49 , F50, F51, F55, F61, F70, X23, X25, X92, மற்றும் X94.

ரத்து செய்யப்படும் வழித்தடம்:

RTA, ரூட் C14 வழித்தடத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் 14 மற்றும் 23 ஆகிய இரண்டு மாற்று வழிப்பாதைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!