அமீரக செய்திகள்

அமீரகத்தில் பணப் பரிமாற்று சேவையை அறிமுகப்படுத்திய ‘du’ நிறுவனம்..!! பயனர்களுக்கு இலவச டேட்டாவும் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் டெலிகாம் நிறுவனமான du, புதிதாக ஃபின்டெக் உரிமத்தைப் பெற்றுள்ளதால் இனி 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் மொபைல் ஆப் வழியாக பணப் பரிமாற்றச் சேவைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பணப்பரிமாற்ற சேவைகள் du சந்தாதாரர்களாக இல்லாதவர்களுக்கும் கிடைக்கும் என்றும் du நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான du, தற்போது 8.6 மில்லியன் மொபைல் சந்தாதாரர்களைக் கொண்டு அமீரகம் முழுவதும் நெட்வொர்க் சேவை வழங்கி வருகிறது. மேலும், du நிறுவனம் சமீபத்திய காலாண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கண்டு வந்த நிலையில் தற்போது ஃபின்டெக் சேவைக்கும் ஒப்புதலை பெற்றுள்ளது.

அதன்படி du பெற்ற ஃபின்டெக் சேவைகளில் P2P பேமெண்ட் எனப்படும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக பணம் அனுப்புதல் முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இது du வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பாளர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமீரகத்தின் மற்றொரு நெட்வொர்க் ஆப்பரேட்டரான e& (etisalat) ஏற்கனவே இந்த சேவையை அமீரகத்தில் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து duவின் CEO ஃபஹத் அல் ஹசாவி அவர்கள் விவரிக்கையில், இந்த புதிய சேவைகள் ‘du pay’ எனும் மொபைல் ஆப்பின் கீழ் செயல்படும் எனவும், மேலும் பயனர்களுக்கு இதில் வழங்கப்படும் IBAN மூலம் அவர்கள் தங்களின் சம்பளங்களை இங்கு டெபாசிட் செய்து கொள்ளவும் இந்த புதிய ஆப் அனுமதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயனர்கள் தங்களின் டிஜிட்டல் வாலட்களுடன் தொடர்புகொள்வதற்கோ அல்லது ATMமில் பயன்படுத்துவதற்கோ தங்களின் கார்டுகளை விரைவில் பெறுவார்கள் என்று கூறிய ஹசாவி, தற்போது கார்டுகள் இல்லாமல் ATMகளில் இருந்து கார்டு இல்லாத சேவைகளைப் (card less service) பயன்படுத்தி பணம் எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Du வின் இந்த புதிய சேவையின் கீழ் பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளையும் Du நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது பயனர்களை ஊக்குவிக்க, நிறுவனம் கட்டணமில்லா சேவையை வழங்குவதுடன் 5 திர்ஹம்ஸ் தொடக்க இருப்பையும் பயனர்களுக்கு வழங்குகிறது. இவை தவிர Du மொபைல் சந்தாதாரர்களுக்கு 10ஜிபி டேட்டாவையும் Du நிறுவனம் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!