அமீரக செய்திகள்

அமீரகவாசிகளே.. ஈத் விடுமுறையில் நீங்கள் மிஸ் பண்ணாம அனுபவிக்க 17 விஷயங்கள் இதோ..

அமீரக குடியிருப்பாளர்கள்.. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஈத் அல் பித்ர் விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிடுகிறீர்களா? இனிய இந்த ஈத் திருநாளில் நீங்கள் தவறாமல் அனுபவிக்க வேண்டிய வெவ்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அமீரகம் எங்கும் உங்களுக்காக வழங்கவுள்ள முக்கிய இடங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

1. தி பீச் (The Beach), JBR:

ஈத் அல் ஃபித்ரைக் கொண்டாட எதிர்வரும் ஏப்ரல் 22, இரவு 9 மணி முதல் தி பீச், JBR மற்றும் புளூவாட்டர்ஸில் நடைபெறும் திகைப்பூட்டும் பைரோடெக்னிக் காட்சியைத் தவறாமல் கண்டுகளிக்கலாம்.

2. அல் முகைரா பே (Al Mugheirah Bay):

அபுதாபியின் அல் தஃப்ரா பகுதியில் நீங்கள் ஈத் பண்டிகையைக் கொண்டாடலாம். இந்த ஒரே இடத்தில் சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு போன்ற வெவ்வேறு அனுபவங்களை உங்களால் அனுபவிக்க முடியும். அதேசமயம், ஏப்ரல் 21 அன்று இரவு 9 மணி முதல் கோர் அல் பாசிமுக்கு மேலே உள்ள இருள் சூழ்ந்த வானம் கண்கவர் வாணவேடிக்கைகளால் பல வண்ணங்களில் ஒளிர்வதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டு ரசிக்கலாம்.

3. ஹுதைரியாத் ஐலேண்ட் (Hudayriyat Island):

அபுதாபியில் உள்ள ஹுதைரியாத் ஐலேண்ட் பீச்சில் ஏப்ரல் 22 அன்றிரவு 9 மணி முதல் வானத்தை வண்ணமயமாக ஒளிரச் செய்யும் வானவேடிக்கைகளை கண்டு மகிழலாம்.

4. துபாய் பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்டுகள்:

ஈத் அல் பித்ரை குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் கூடிக் கொண்டாட ஏப்ரல் 22 அன்றிரவு 7 மணிக்கும் 9 மணிக்கும் துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் இடமளிக்கிறது. அதேசமயம், MOTIONGATE Dubai ஆனது ஏப்ரல் 21 அன்று ஒளிரும் விளக்குகள், காட்சிகள் மற்றும் ILLUMINATE ஐ ஹாலிவுட் திரையரங்கில் அறிமுகம் செய்கிறது. எனவே, இது விருந்தினர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

5. IMG வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சர் :

சுமார் ஆறு மண்டலங்களைக் கொண்ட IMG உட்புற தீம் பார்க்கில் அதிரடியான சாகச ரைடுகள் செல்லலாம். இங்கு பார்வையாளர்களை குதூகலமாக வைத்திருக்க கார்ட்டூன் நெட்வொர்க் மண்டலம், மருதாணி கலைஞர்கள், முகத்தில் ஓவியம் வரைபவர்கள் உள்ளிட்ட உற்சாகமான செயல்பாடுகள் ஏராளமாக உள்ளன. அதிலும் நிச்சயமாக, உங்களுக்குப் பிடித்த மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் மற்றும் கார்ட்டூன் நெட்வொர்க் கேரக்டர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த பார்க் ஈத் அல் பித்ர் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்.

6. லெகோலாண்ட் ஈத் அல் பித்ர் ப்ளேகேஷன்:

அமீரகத்தில் உள்ள குடும்பங்கள், 2 முதல் 12 வயதுடைய குழந்தைகளுடன் லெகோலாண்ட் துபாய் ரிசார்ட்டில் ஈத் அல் பித்ர் விளையாட்டைக் கொண்டாடலாம். இங்கு லெகோ சிட்டி மற்றும் வாட்டர் பார்க் உடன் தீம் பார்க்கும் உள்ளது. அத்துடன் 60 க்கும் மேற்பட்ட ரைடுகள் மற்றும் கேம்களும் உள்ளன. மேலும், குழந்தைகள் இலவசமாக காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு சாப்பிடலாம். அதுமட்டுமின்றி பூங்காவின் இணையதளத்தில் Legoland Hotel ஸ்லீப்ஓவரை முன்பதிவு செய்யும் போது தள்ளுபடியும் கிடைக்கும்.

7. மூவி நைட் ஆப் அரேபியா:

அபுதாபியில் உள்ள யாஸ் ஏக்கர்ஸ் கோல்ஃப் & கன்ட்ரி கிளப் அரேபியாவின் சிறப்பு மூவி நைட் ஆஃப் அரேபியாவை நடத்துகிறது, இது ஏப்ரல் 22 சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. அத்துடன் அரேபிய உணவுகள் மற்றும் இனிப்பு விருந்துகளின் பரந்த தேர்வும் உள்ளது. மேலும் பார்வையாளர்கள் மருதாணி கலைஞர்களிடம் மருதாணி வைத்துக் கொள்ளலாம்.

8. Oli-Oli – நிலவின் அருங்காட்சியகம்:

ஈத் அல் பித்ரின் கடைசி நாட்களைக் குறிக்கும் வகையில், நிலவின் அருங்காட்சியகத்தின் ஒலிஒலியில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன. மேலும், உலகப் புகழ் பெற்ற பிரபல கலைஞரான லூக் ஜெர்ராம் அவர்கள் உருவாக்கிய நிலவின் 5-மீட்டர் பிரதியைக் காண ஏப்ரல் 30 வரை குடும்பங்கள் செல்லலாம்.

9. துபாய் முதலை பூங்கா:

துபாயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒரு புதிய பொழுதுபோக்கு இடம் துபாய் முதலை பூங்காவாகும். இது பார்வையாளர்களுக்கு சுமார் 250 நைல் முதலைகளின் வாழ்வியலை நெருக்கமாய்ப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. கிட்டத்தட்ட 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது.

10. டைம்ஸ் ஸ்கொயர் சென்டர்:

ஏப்ரல் 20 முதல் 22ஆம் தேதி வரை மதியம் 2 முதல் 8 மணி வரை, தரைதளத்தில் நடைபெறும் கண்கவர் பொழுதுபோக்கு மற்றும் குடும்ப-வேடிக்கை ஒர்க் ஷாப்புகளை பார்வையாளர்கள் அனுபவிக்கலாம். மேலும், ஸ்டோன் ஆர்ட், மெழுகுவர்த்தி தயாரித்தல், காபி கலை, ஊடு வாசனை திரவியம் தயாரித்தல், சோப் பாக்ஸ் தயாரித்தல் மற்றும் மருதாணி டிசைன் போன்ற பல்வேறு பிரிவுகளும் செயல்பாடுகளும் இங்கு இருக்கும்.

11. Ibn Battuta Mall:

இங்கு வண்ணமயமான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒர்க் ஷாப்புகளுக்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இலவசமாக பதிவு செய்யலாம். நமது அழகான கிரகத்தைப் பற்றிய அற்புதமான புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதுடன், அனைத்து வயதினருக்கும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு மற்றும் கல்வி சார்ந்த இசை நிகழ்ச்சியும் இருக்கும். ஏப்ரல் 21 தொடங்கி 23 வரை எமிராட்டி நாட்டுப்புற கலைக் குழுவான அல்-ஹர்பியா இசைக்குழுவின் பாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் அனுபவிக்க முடியும்.

12. எமிரேட்ஸ் பயோ பார்ம்:

Emirates Bio Farm ஈத் அல் ஃபித்ரைக் கொண்டாடும் வகையில், ஆர்கானிக் முட்டைகள், புதிய ரொட்டி மற்றும் ஒரு நபருக்கு 80 திர்ஹம்களுக்கு பேஸ்ட்ரிகள் போன்றவற்றை வழங்குகிறது. மேலும், இங்கு ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 40 திர்ஹமும், மூன்று வயதுக்குட்பட்டவர்கள் இலவசமாகவும் சாப்பிடலாம்.

13. துபாய் உணவு திருவிழா:

இந்த ஆண்டு துபாய் உணவுத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வானவேடிக்கைக் காட்சியும், அல்-ஹர்பியா மற்றும் அல்-அய்யாலா இசைக்குழுக்களிலிருந்து மாலை 4 மணி மற்றும் இரவு 10 மணி வரை இசை நிகழ்ச்சியும் இருக்கும். மேலும் 12 வயதுக்குட்பட்ட மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நுழைவு இலவசம்.

14. குளோபல் வில்லேஜ் :

உங்கள் ஈத் பண்டிகையை வண்ணமயமாகக் கொண்டாட குளோபல் வில்லேஜில் ஈத் சிறப்பு கொண்டாட்டங்களை நீங்கள் அனுபவிக்கலாம். மேலும், ஈத் மார்க்கெட் மற்றும் மஜ்லிஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆகியவற்றை சுற்றிப்பார்க்கலாம்.

15. Louvre அபுதாபியில் உள்ள டிரம்ஸ்:

ஏப்ரல் 22 அன்று Louvre அபுதாபியில் அதிரடியான டிரம்ஸ் நிகழ்ச்சிகள் நடைபெறும். கடலுக்கு அடியில் அமைந்துள்ள லூவ்ரின் அழகிய கட்டிடக்கலையை கண்டுகளிப்பதுடன், கண்டங்கள், கலாச்சாரங்கள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான இசை மற்றும் நடன தொடர்பை மதியம் 12 முதல் மாலை 6 மணி வரை நேரடியாக காணலாம்.

16. பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் ஷஃப்யா அல் ஈத்:

அல்-அய்யாலா மற்றும் அல்-ரஸ்ஃபாவின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை அல் அய்ன் அரண்மனை அருங்காட்சியகம், அல் அய்ன் ஒயாசிஸ் மற்றும் கஸ்ர் அல் முவைஜி போன்ற அல் அய்ன் கலாச்சார தளங்களில் குடும்பங்கள் குழந்தைகளுடன் கண்டுகளிக்கலாம்.

17. கஸ்ர் அல் ஹொஸ்னில் ஈத் அல் பித்ர்:

இங்கு பார்வையாளர்களுக்கு சிறப்பு ஈத் பரிசுகள் இருக்கும், மேலும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் ஃபால்கன்ரி உள்ளிட்ட கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின் செயல்விளக்கங்களை கஸ்ர் அல் ஹொஸ்ன் நடத்தும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!