அமீரக செய்திகள்

அபுதாபி – துபாய் இடையேயான முக்கிய சாலை வரும் 25 ம் தேதி மூடப்படும்.. வாகன ஓட்டிகளுக்கு மாற்று வழியை பகிர்ந்த ITC..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 ஆவது பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் அமீரகத்தில் நடைபெறவுள்ள சைக்கிள் பயணத்திற்காக வரும் செவ்வாய்க்கிழமை 25 ம் தேதி அபுதாபியிலிருந்து துபாய் செல்லும் பிரதான சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து (ITC) மையம் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ITC, அபுதாபியின் முக்கிய சாலைகளான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் சாலை (E10), ஷேக் மக்தூம் பின் ரஷித் சாலை (E11) மற்றும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சாலை (E311) ஆகிய சாலைகள் அனைத்தும் செவ்வாய்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சைக்கிள் சுற்றுப்பயணம் கடந்து செல்லும் போது மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அபுதாபி மற்றும் துபாய் இடையேயான இந்த சாலைகளில் எந்தந்த வழித்தடங்கள் மூடப்படும் என்பதற்கான வரைபடத்தையும் சமூக வலைத்தளத்தில் ITC பகிர்ந்துள்ளது. மேலும் இந்த நேரங்களில் மேற்கண்ட சாலைகளுக்கு பதிலாக மாற்று வழியை தேர்ந்தெடுக்குமாறும் அந்த வரைபடத்தின் மூலம் வாகன ஓட்டிகளுக்கு ITC அறிவுறுத்தியுள்ளது.

ITC வெளியிட்டுள்ள வரைபடத்தின்படி, அபுதாபி சிட்டியிலிருந்து துபாய்க்கு செல்ல கூடிய முக்கிய சாலையில் (E10) உள்ள ஷேக் சையத் பிரிட்ஜ்ஜிற்கு முந்தைய எக்ஸிட்டிலிருந்து அல் ரஹா, அல் சஹாமா (E11), அல் பஹியா (E11) மற்றும் அல் ரஹ்பா (E11) வரையிலான சாலையும் மூடப்படவுள்ளது. பின்னர் அல் ரஹ்பாவிலிருந்து ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சாலை (E311) வழியாக எக்ஸ்போ 2020 வரையிலான சாலையும் மூடப்படவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள இந்த சைக்கிள் பயணமானது, அபுதாபியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து தொடங்கி 111 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எக்ஸ்போ 2020 துபாயில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!