அமீரக செய்திகள்

UAE: யார் யாரெல்லாம் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரு வாரத்திற்கு ஒருமுறை PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்..?? முழுத்தகவல் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் சமீப காலமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை ஊழியர்கள் கொரோனாவிற்கான PCR டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான கட்டாய PCR சோதனைகள் குறித்து பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் யார் யாரெல்லாம் எப்பொழுது PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 5 துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள்

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் குறிப்பிட்ட ஐந்து துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு முறை PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக அரசு குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து துறைகளாவன: ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சமூக மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைகள் என கூறப்படும் சலவை நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள். கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இந்த சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி தனியார் துறை

அபுதாபியில் உள்ள முக்கிய துறைகள் மற்றும் சேவைத் தொழில்களில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை PCR சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் அவர்கள் சோதனைகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

அபுதாபி அரசுத் துறை

பிப்ரவரி 7 முதல், அபுதாபி அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் 30 சதவீத திறனில் இயங்கி வருகின்றன. கொரோனாவிற்கான தடுப்பூசி இதுவரை எடுக்காத அனைத்து ஊழியர்களும் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஷார்ஜா தனியார் துறை

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், கஃபேக்கள், பேக்கரிகள் மற்றும் சலூன்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை சோதனை எடுக்க வேண்டும்

ஷார்ஜா அரசுத் துறை

ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையெனில், ஒவ்வொரு வாரமும் PCR சோதனை எடுக்க வேண்டும்

அஜ்மான்

உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் உள்ள தொழிலாளர்களுக்கு கட்டாயமாகும்; சூப்பர் மார்க்கெட், விளையாட்டு அரங்குகள்; சலூன் கடைகள், தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலகங்கள், உணவு மற்றும் உணவு விநியோக நிறுவனங்கள் மற்றும் கார் கழுவும் கடைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் PCR சோதனை மேற்கொள்வது கட்டாயமாகும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத்துறை ஊழியர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளின் அனைத்து ஊழியர்களும் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறை PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!