அமீரக செய்திகள்

UAE: காரில் இருந்து சாலைகளில் குப்பைகளை வீசினால் 1,000 திர்ஹம் அபராதம்..!! குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை…

அமீரகத்தில் பொது வெளியில் குப்பைகளை போடுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதற்காக அபராதம் விதிக்கப்படும் என்பதைம் அனைவருக்கும் தெரிந்தாலும் ஒரு சிலர் இதனை முழுமையாக பின்பற்றுவதில்லை. இதனை நினைவூட்டும் விதமாக அபுதாபியில் உள்ள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அபுதாபி நகர முனிசிபாலிட்டி ஏற்பாடு செய்த ‘Our City is Beautiful’ என்ற நிகழ்வில், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாததால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும், வாகனங்களில் இருந்து குப்பைகளை சாலையில் வீசுவதைத் தவிர்ப்பதன் அவசியத்தையும் அதிகாரிகள்  வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற போக்குவரத்து குற்றங்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன் ஓட்டுநர் உரிமத்தில் ஆறு பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமானது அபுதாபியில் உள்ள ஷக்பூத் சிட்டி ஸ்கூல்ஸ், அல் அஹ்லியா மருத்துவமனை, அபுதாபி கழிவு மேலாண்மை நிறுவனம் மற்றும் அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சையத் சிட்டியின் ரப்தான் பார்க்கில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வின் போது, அபுதாபி எமிரேட்டின் தோற்றத்தைப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், பொதுச் சாலைகளில் இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டல் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் டீன் மஹ்மூத் யூசுப் அல் பலுஷி அவர்கள் பேசுகையில், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துபாயில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் இ-ஸ்கூட்டர் விபத்துக்களில் 5 பேர் மரணித்திருப்பதாகவும், 29 பேர் காயமடைந்தததாகவும் செவ்வாயன்று (அக்டோபர் 24 ) துபாய் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதேகாலகட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட அபராதம் விதிக்கப்பட்டதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, குழந்தைகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்குமாறும் இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதும் அவசியம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!