அமீரக செய்திகள்

துபாய் மற்றும் அபுதாபியில் காரை விற்கும் போது வாகன உரிமையை எளிதாக மாற்றுவது எப்படி.?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு காரை வாங்க திட்டமிடுகிறீர்களா? நீங்கள் குறைந்தபட்ச தேவைகள், விரைவான கடன் ஒப்புதல்கள் மற்றும் நெகிழ்வான கட்டண விருப்பங்கள் மூலம் எளிதாக புத்தம் புதிய காரை வாங்கலாம் மற்றும் அதே நாளில் வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் என்பது தெரியுமா? அதேபோல், உங்களால் அந்த காரை எளிதாக செகண்ட் ஹேண்ட் சந்தையிலும் தேவைப்படும் போது விற்பனை செய்யவும் முடியும்.

அவ்வாறு நீங்கள் உங்கள் காரை வேறொருவருக்கு விற்கும் போது, உங்கள் காரின் பதிவு புதிய உரிமையாளரின் பெயருக்கு மாற்றுவது அவசியம். இப்போது குடியிருப்பாளர்கள் இதற்கான ஆவணங்களை எளிதாக ஆன்லைனில் முடிக்கும் வகையில், போக்குவரத்து அதிகாரிகள் இந்த செயல்முறையை நெறிப்படுத்தியுள்ளனர்.

துபாயில் வசிப்பவர்கள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் அதன் டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும், அபுதாபியில் இருப்பவர்கள் Tamm தளம் வழியாகவும் வாகன உரிமையை மாற்றுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். அது பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே காணலாம்.

துபாய்

துபாயில் இந்த சேவைக்கு விண்ணப்பிக்க ஐந்து வழிகள் உள்ளன. இருப்பினும், RTA இணையதளம் மற்றும் ஸ்மார்ட் ஆப் மூலம் மிகவும் எளிதாக விண்ணப்பிக்க முடியும். சேவைக்கான அணுகலைப் பெற உங்களின் UAE பாஸைப் பயன்படுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • வாங்குபவர் மற்றும் விற்பவரின் அசல் எமிரேட்ஸ் ஐடிகள்
  • வாகன காப்பீட்டின் டிஜிட்டல் நகல்
  • தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையின் (technical inspection report) டிஜிட்டல் நகல்

செலவு:

  • தனியார் அல்லது பொது இலகுரக வாகனத்திற்கு 350 திர்ஹம்.
  • 3 முதல் 12 டன் வரையிலான தனியார் வாகனத்திற்கு 400 திர்ஹம்.
  • 12 டன்களுக்கு மேல் உள்ள தனியார் வாகனத்திற்கு 800 திர்ஹம்.

இது தவிர, பின்வரும் பிற கட்டணங்களும் அடங்கும்.

  • குறுகிய நம்பர் பிளேட்டுகளுக்கு 35 திர்ஹம்ஸ் மற்றும் நீளமானவைகளுக்கு 50 திர்ஹம்ஸ்
  • கிளாசிக்கல் நம்பர் பிளேட்டுகளுக்கு: 150 திர்ஹம்ஸ் (நீண்ட அல்லது குறுகிய)
  • துபாய் பிராண்டட் பிளேட்டுகளுக்கு: 200 திர்ஹம்ஸ்
  • ஆடம்பர நம்பர் பிளேட்டுகளுக்கு: 500 திர்ஹம்ஸ்
  • அறிவு மற்றும் புதுமைக்கான கட்டணம்: 20 திர்ஹம்ஸ்

RTA இணையதளம் வழியாக செயல்முறை:

  • உங்கள் UAE பாஸைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • வாகன உரிமச் சேவைகளின் கீழ் ‘உரிமையை மாற்று’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • வாங்குபவர் மற்றும் விற்பவர் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
  • தேவையான கட்டணங்கள் தவிர, ஏதேனும் அபராதங்களும் தீர்க்கப்பட வேண்டும்.
  • விற்பனையாளர் பின்னர் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் அல்லது வாகனப் பதிவு மற்றும் ஆய்வு மையத்திற்குச் சென்று, கட்டணத் தீர்விலிருந்து 14 நாட்களுக்குள் வாகனத் தகடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வாங்குபவர் வாகனப் பதிவை முடிக்க சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும்.

பரிவர்த்தனையை முடிக்க விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் கண்டிப்பாக நேரில் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். அதேபோன்று ஜெபல் அலி ஃப்ரீ ஜோன் பரிவர்த்தனைகள் ஜெபல் அலி மையத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் RTA தெரிவித்துள்ளது.

அபுதாபி

அபுதாபியில் உள்ளவர்கள், வாகன உரிமையை ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு Tamm தளம் (https://www.tamm.abudhabi) மூலம் எளிதாக மாற்றலாம்.

தேவையான ஆவணங்கள்:

  • அசல் எமிரேட்ஸ் ஐடி
  • வாங்குபவரின் பெயரில் 13 மாத வாகன காப்பீட்டு பாலிசி (பதிவு காலாவதியாகிவிட்டால்) அல்லது விற்பனையாளரிடமிருந்து வாங்குபவருக்கு காப்பீடு பரிமாற்றம் (பதிவு இன்னும் செல்லுபடியாகும் பட்சத்தில்)
  • வாகனம் அடமானம் வைக்கப்பட்டிருந்தால், அடமான வெளியீடு அல்லது பரிமாற்ற கடிதம் ஒன்றை  சமர்ப்பிக்க வேண்டும்

சேவை கட்டணம்:

  • இலகுரக வாகனத்திற்கு 350 திர்ஹம் (தனியார் அல்லது பொது)
  • 3 முதல் 12 டன் எடையுள்ள தனியார் வாகனத்திற்கு 400 திர்ஹம்
  • 12 டன்களுக்கு மேல் எடையுள்ள தனியார் வாகனத்திற்கு 800 திர்ஹம்

செயல்முறை:

  • விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை Tamm தளம் மூலம் சமர்ப்பிக்கவும்
  • கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  • வாகன பதிவு அட்டையை கோர வேண்டும்.

துபாயைப் போலவே, பரிவர்த்தனையை முடிக்க வாங்குபவர் மற்றும் விற்பவரின் தனிப்பட்ட வருகை அவசியம்.  மேலும், அபராதம் மற்றும் மீறல்களை பரிமாற்றத்திற்கு முன் தீர்ப்பதும் அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!