அமீரக செய்திகள்

UAE: கொரோனா தடுப்பூசி போடும் நபர்களுக்கு இலவச பயணம்..!! Uber அதிரடி அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச பயணத்தை உபெர் (Uber) நிறுவனம் அறிவித்துள்ளது.

வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் நோய்த்தடுப்பு இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள பொது தடுப்பூசி மையங்களுக்கு தலா 60 திர்ஹம் வரை இரண்டு இலவச உபேர் பயணங்களை பயணிகள் பெற முடியும். இந்த இலவச பயணம் ஜூன் 22 முதல் ஜூலை 31 வரை அனைத்து வயதினர் மற்றும் தேசிய மக்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ஆகியவை இந்த முயற்சியை முழுமையாக ஆதரிக்கின்றன.

துபாய் மற்றும் அபுதாபி முழுவதும் உள்ள மக்கள் uber அப்ளிகேஷனைப் பயன்படுத்தி 97 மையங்களுக்கு இலவசமாகப் பயணிக்கலாம். துபாயில் உள்ள பல DHA மையங்கள், SEHA தடுப்பூசி மையங்கள் மற்றும் அபுதாபியில் உள்ள பிற தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்கள் இதில் அடங்கும்.

இலவச பயணத்தை கோருவது எப்படி?

  • Uber- இடமிருந்து வரும் sms மற்றும் email மூலம் பெறப்பட்ட URL லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • ‘Accept voucher’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • அதில் காலாவதியாக கூடிய தேதி உள்ளிட்ட வவுச்சர் விவரங்கள் தோன்றும்
  • பின்னர் வவுச்சர் வாலட்டில் (wallet) தோன்றும்
  • அதன் பின்னர், நீங்கள் பிக்-அப் அல்லது டிராப்-ஆஃப் செய்ய வேண்டிய இருப்பிடத்தை உள்ளிட்டு இலவசமாக பயணிக்கலாம்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!