ஷாப்பிங் ஆஃபர்ஸ்

UAE: பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி.. 10 நாட்கள் நடக்கும் சூப்பர் சேல்..

அமீரகத்தில் குளிர்காலம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஷார்ஜாவில் உள்ள எக்ஸ்போ சென்டரில் 10 நாள் குளிர்கால விற்பனை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. இதில் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடிகள் மற்றும் காம்போ சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் CEO சைஃப் முகமது அல் மிட்ஃபா கூறுகையில், “பண்டிகைக் காலம் என்பது நுகர்வோர் ஷாப்பிங் செய்வதற்கான உகந்த நேரமாகும். அமீரகத்தில் பெரும்பாலான சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் ஆண்டு இறுதியிலேயே களைகட்டும். அதுமட்டுமின்றி, பண்டிகைக் காலம் முழுவதுமாக மீண்டும் திறக்கப்பட்டு, அமீரகம் பொருளாதாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும் நிலையில், 2021 குளிர்கால கிளியரன்ஸ் விற்பனையானது சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இதேபோன்ற கண்காட்சிகளை நடத்திய அல் மிட்ஃபா, ஆடை மற்றும் வாழ்க்கை முறை தயாரிப்புகளுக்கான தேவை கொரோனாவிற்கு முந்தைய அளவைப் போலவே தற்பொழுது மீண்டும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விற்பனை மூலம் நுகர்வோர்கள் பிரபலமான பிராண்டுகளின் ஃபேஷன், எத்னிக் உடைகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றில் தள்ளுபடியினை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில், Ahmed Al Magribi, Geelato Abaya, Ajmal Perfumes, Brandbazaar, Bellissimmo Perfumes & Cosmetics, CCC, Dunes, Nine West, Naturalizer, TOMS, Hush Puppies, Kiabi, Riva, Skechers, Umbro, K-Swiss, Crayola, Vtech, Cerruti, Escada, Police, Baby Shop, போன்ற புகழ்பெற்ற பிராண்டுகள் பங்கேற்கின்றன.

இந்த விற்பனை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணமாக பெரியவர்கள் 5 திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!