ஷாப்பிங் ஆஃபர்ஸ்

UAE: கோலாகலமாக துவங்கிய துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்… பொருட்களுக்கு தள்ளுபடி, வான வேடிக்கை, ட்ரோன் ஷோ போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவிப்பு…!!

அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் இந்த வருடம் தனது 27 வது பதிப்பை தொடங்கியுள்ளது. இதில் மக்கள் வாங்கும் பொருட்களுக்கு ப்ரொமோஷன்கள் மற்றும் பரிசுகள், புதுமையான நிகழ்வுகள் மற்றும் நேரடி கச்சேரிகள், ட்ரோன்கள் மற்றும் வானவேடிக்கைகள், லேசர் ஷோக்கள், குடும்ப பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறவுள்ளன.

இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் போது 1,000 க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் விற்பனையில் பங்கேற்கும். இந்த நிகழ்வினையொட்டி ​​துபாயின் முக்கிய மால்களில் 90 சதவீதம் வரை தள்ளுபடியுடன் சூப்பர் 12 மணி நேர விற்பனையும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவல் டிசம்பர் 15, 2021 முதல் ஜனவரி 30, 2022 வரை இயங்கும் எனவும்கூறப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள்

DSF ல் அல் சீஃப் மார்க்கெட், குளோபல் வில்லேஜ், எக்ஸ்போ டிஸ்ட்ரிக்ட், இதர உட்புற மற்றும் வெளிப்புற இடங்கள் உட்பட நகரமெங்கும் ஒன்பது இடங்களில் பிரத்தியேக கலாச்சார நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ட்ரோன்கள் மற்றும் வான வேடிக்கைகள்:

அல் சீஃப், தி பீச், புளூவாட்டர்ஸ், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, தி பாயின்ட், லா மெர் மற்றும் தி துபாய் ஃப்ரேம் போன்ற பல இடங்களில் வான வேடிக்கைகள், ட்ரோன்கள், மல்டி-சென்சரி இன்ஸ்டாலேஷன் ஆகியவை சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படவுள்ளன. அத்துடன் தினசரி ட்ரோன் லைட் ஷோவும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராண்ட் ராஃபிள்ஸ்:

இதில் 40 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தினசரி பரிசு குலுக்கல் நகரின் மால்கள் மற்றும் சூக்குகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். எமிரேட்ஸ் எவ்ரிடே ஸ்கைவர்ட்ஸ் மில்லியனர் ப்ரோமோஷன், துபாய் கோல்ட் அண்ட் ஜூவல்லரி குரூப் ரேஃபிள், துபாய் ஷாப்பிங் மால்ஸ் குரூப் ரேஃபிள், ஐடியல்ஸ் ராஃபிள்ஸ் மற்றும் இன்ஃபினிட்டி மற்றும் நிசான் மெகா ராஃபிள் ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!