அமீரக செய்திகள்

மில்லியன் கணக்கில் பரிசுத்தொகையை அள்ளித்தரும் எமிரேட்ஸ் டிராவில் கலந்து கொள்வது எப்படி…??

அமீரகத்தில் பிக் டிக்கெட், துபாய் டூட்டி ஃப்ரீ ராஃபிள் போன்ற பரிசு குலுக்கல் போட்டிகள் பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது இந்த வருடம் புதிதாக மிகப்பெரிய அளவில் எமிரேட்ஸ் டிரா எனும் வாராந்திர ராஃபிள் டிராவானது துவக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று நாம் நமக்கான எண்களை தேர்வு செய்வதன் மூலம் வெற்றி நிர்ணயம் செய்யப்படும்.

ஆரம்ப கட்டத்தில் அனைத்து எண்களும் பொருந்தி வெற்றி பெறும் நபருக்கு 77,777,777 திர்ஹம் பரிசுத்தொகை என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு வருகிறது.

இதில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால் உங்களுக்கான முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

>> பங்கேற்க விரும்பும் நபர் www.emiratesdraw.com இல் ஒரு 50 திர்ஹம் பென்சில் அல்லது Coral Polyp ஐ வாங்குவதன் மூலம் வாராந்திர டிராவில் பங்கேற்கலாம்.

>> ஆன்லைனில் பதிவு செய்தவுடன் பங்கேற்பாளர்கள் தங்களின் ஏழு இலக்க எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கணினி அவர்களுக்கான எண்ணைத் தோராயமாகத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒவ்வொரு பங்கேற்பாளரின் எண்ணும் லாக் செய்யப்பட்டு விடும். அதே எண்ணை வேறு யாரும் தேர்வு செய்ய முடியாது.

>> இந்த டிராவில் பங்கேற்பாளர்கள் இரண்டு தனித்தனி டிராவின் மூலமாக பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெறலாம்.

>> முதலாவது ஒரு ரேஃபிள் டிரா ஆகும். அங்கு ஒவ்வொரு வாரமும், ஏழு அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்களுக்கு தலா 77,777 திர்ஹம்கள் அளிக்கப்படும்.

>> இரண்டாவதாக, அனைத்து பங்கேற்பாளர்களும் ஆறு பரிசுப் பிரிவுகளுடன் கூடிய இரண்டாவது டிராவில் பங்கு பெறுவார்கள். இதில் ஏழு எண்களும் பொருந்தினால், அந்த அதிர்ஷ்டசாலிக்கு 95 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை முதல் பரிசாக வழங்கப்படும்.

இந்த மிகப்பெரிய டிராவானது www.emiratesdraw.com மற்றும் நிறுவனத்தின் YouTube மற்றும் Facebook சேனல்கள் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்த எண்ணை முன்கூட்டியே பதிவு செய்யுமாறும், மேலும் தகவலுக்கு 800 77 777 777 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து விபரங்கள் அறியலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!