அமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு..!! விலை விபரங்கள் உள்ளே..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது ஏப்ரல் 2022 ஆம் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது இந்த முறையும் உயர்ந்துள்ளது.
எரிபொருள் குழுவின் ஏப்ரல் மாத விலைப்பட்டியலின் படி, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.74 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. ஆனால் இந்த வகை பெட்ரோலின் விலை மார்ச் மாதத்தில் 3.23 திர்ஹம்சாக இருந்தது.
அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.62 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இந்த வகை பெட்ரோலின் வர மார்ச் மாதம் 3.12 திர்ஹம்சாக இருந்தது.
மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 3.55 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இது 3.05 திர்ஹம்சாக மட்டுமே மார்ச் மாதத்தில் இருந்தது.
அதே சமயம் மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.19 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது ஏப்ரல் மாத விலை பட்டியலில் 4.02 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
⛽ Monthly Fuel Price Announcement:
April 2022 fuel prices released by the #UAE Fuel Price Follow-up Committee pic.twitter.com/yECBLWalyV— Emarat (امارات) (@EmaratOfficial) March 31, 2022