அமீரக செய்திகள்

துபாயில் இந்தியர்களுக்கு சேவை வழங்கும் இடத்தை மாற்றிய தூதரகம்…!!

துபாயில் உள்ள இந்திய வெளிநாட்டவர்களுக்கு ஆவண சான்றளிப்புக்கான மையம் (Document Attestation Center) சிறிய இடத்தில் இயங்கி வந்ததால் கூட்டமாகவும் இடவசதி பற்றாக்குறையாகவும் இருந்து வந்தது. இதன் காரணமாக இப்போது பெரிய காத்திருப்பு அறைகளுடன் கூடிய பெரிய மற்றும் விசாலமான ஆவண சான்றளிப்பு மையம்  அமைக்கப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அறிவித்துள்ளது.

தற்போது வரை இந்த சேவைகளானது துபாய் ஓட் மேத்தாவில் இருக்கும் பிசினஸ் ஏட்ரியம் கட்டிடத்தில் உள்ள அறை எண் 201 மற்றும் 202-ல், ​​தூதரகங்களின் அவுட்சோர்ஸ் சேவை வழங்குநரான SG IVS குளோபல் கமர்ஷியல் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் மூலம் வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி 15 முதல், இந்த சேவையானது அதே கட்டிடத்தின் முதல் தளத்தில் பெரிய மற்றும் அதிக விசாலமான பகுதிகளைக் கொண்டிருக்கும் அறை எண்கள் 102, 103 மற்றும் 104 க்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துபாயில் உள்ள இந்திய துணை தூதரக துணை தூதர் சாஹில் அகர்வால் கூறுகையில் “தற்போது IVS சென்டரானது பவர் ஆஃப் அட்டர்னி பதிவு, உயில் பதிவு, கல்வி ஆவணங்களை சான்றளித்தல், பட்டங்கள் மற்றும் திருமணச் சான்றிதழ்கள் போன்ற மிக முக்கியமான பணிகளை மேற்கொள்கிறது”.

“இது ஒரு நாளில் 500 விதமான விண்ணப்பங்களைச் செயல்படுத்த முடியும். ஆனால், போதிய இடவசதி இல்லாததால், கட்டடத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது. புதிய இடமானது, பெரிய காத்திருப்புப் பகுதிகளுடன் கூடிய விசாலமான மண்டபத்தை வழங்கும். அத்துடன் இதற்கான செயல்முறையை மேலும் சீரமைக்க முயற்சிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கான தொடர்பு விபரங்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவிக்க துணைத் தூதரகம் திட்டமிட்டுள்ளது. 

SG IVS உலகளாவிய சேவைகளுக்கான வேலை நேரம் பின்வருமாறு:

* திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

* சனிக்கிழமை: காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை.

குறிப்பிட்ட தகவல் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்த விரும்புவோர் இந்த மையத்தை 04-3579585 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது பிரவாசி பாரதிய சேவா கேந்திராவை (PBSK) அதன் 24 மணி நேர உதவி எண்ணான 80046342 என்ற எண்ணில் அழைக்கலாம். அத்துடன்  [email protected], [email protected], [email protected] ஆகிய ஈ-மெயில் முகவரிகளுக்கு ஈ-மெயில் அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!