அமீரக செய்திகள்

அபுதாபி டோல் கேட் கட்டண விபரம், darb அக்கவுண்டில் பதிவு செய்யும் முறை மற்றும் அதனை பற்றிய முழு தகவல்கள்..!!

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வரும் 2021 ஜனவரி 2 முதல் அபுதாபியில் அமைக்கப்பட்டிருக்கும் டோல் கேட்களில் ‘Darb’ கட்டண முறை செயல்பாட்டுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த புதிய டோல் கேட்களில் வசூலிக்கப்படவுள்ள கட்டணத்தொகை மற்றும் வாகன ஓட்டுனர்கள் Darb சிஸ்டமில் ரிஜிஸ்டர் செய்யும் முறை குறித்தும் அபுதாபி போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது. அதனை பற்றிய முழு தகவலையும் நீங்கள் கீழே காணலாம்.

டோல் கேட்கள் அமைந்துள்ள இடம்…

மொத்தம் நான்கு டோல் கேட்கள் அபுதாபி தீவிற்குள் நுழையும் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. அவை

1. ஷேக் சையத் பிரிட்ஜ்

2. ஷேக் கலீஃபா ப்ரிட்ஜ்

3. முசஃபா பிரிட்ஜ்

4. அல் மக்தா பிரிட்ஜ்

கட்டணம் வசூலிக்கப்படும் நேரங்கள்…

நாளின் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் நாள் முழுதும் கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது. மற்ற நாட்களில் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்படும் நேரங்கள்

1. காலை 7 முதல் 9 மணி வரை

2. மாலை 5 முதல் 7 மணி வரை

ஒவ்வொரு முறை டோல் கேட்டை கடக்கும் போது செலுத்த வேண்டிய கட்டணம்…

ஒவ்வொரு முறை டோல் கேட்டை கடக்கும் போதும் 4 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும், தனியார் வாகனங்கள் ஒரு நாளில் செலுத்த வேண்டிய அதிகபட்ச கட்டணம் 16 திர்ஹம்ஸ். இதன் பொருள் நீங்கள் ஒரு நாளில் நான்கு தடவைகளுக்கு மேல் டோல் கேட்டை கடந்தாலும், உங்களிடம் அதிகபட்சம் 16 திர்ஹம் மட்டுமே வசூலிக்கப்படும்.

அதிகபட்ச மாதாந்திர கட்டணம்…

தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணமும் அபுதாபி போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி,

1. முதல் வாகனத்திற்கு 200 திர்ஹம்ஸ்

2. இரண்டாவது வாகனத்திற்கு 150 திர்ஹம்ஸ்

3. இரண்டிற்கும் மேலான ஒவ்வொரு கூடுதல் வாகனத்திற்கும் 100 திர்ஹம்ஸ்

இருப்பினும் நிறுவனங்களின் வாகனங்களுக்கு தினசரி மற்றும் மாதாந்திர கட்டண தவணைகள் பொருந்தாது.

Darb சிஸ்டமில் ரிஜிஸ்டர் செய்யும் முறை…

https://darb.itc.gov.ae/RucWeb/login என்ற இணையதளம் அல்லது Darb அப்ளிகேஷன் மூலம் வாகன உரிமையாளர்கள் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.

1: தங்களுக்கென புதிய கணக்கை உருவாக்க வேண்டும். அதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் அல்லது app -ல் சென்று create new account சென்று individual என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2: அதில் சென்றவுடன் உங்கள் email முகவரியை டைப் செய்ய வேண்டும்.

3: பின், உங்கள் email முகவரிக்கு அனுப்பப்பட்ட OTP -ஐ உள்ளிட வேண்டும்.

4: அடுத்தபடியாக, உங்கள் வாகனம் பதிவு செய்த எமிரேட் மற்றும் traffic code number – ஐ டைப் செய்ய வேண்டும்.

5: பின்னர், உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்து verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6: அதன்பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP -ஐ டைப் செய்ய வேண்டும்.

7: பின்னர், இறுதியாக உங்களுக்கான password -ஐ டைப் செய்து ரிஜிஸ்டரேஷன் செயல்முறையை முடிக்க வேண்டும்.

ரிஜிஸ்டரேஷன் முடித்த பிறகு நீங்கள் உங்கள் அக்கவுண்டில் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.

darb அக்கவுண்ட் தொடங்குவதற்கான பதிவு கட்டணம்…

குறைந்தபட்ச கட்டணமாக ஒரு வாகனத்திற்கு 100 திர்ஹம் செலுத்தவேண்டும். எனினும் ரிஜிஸ்டரேஷன் முடிந்ததும் 50 திர்ஹம்ஸ் மீண்டும் உங்கள் கணக்கில் திரும்ப செலுத்தப்படும். அதன் பின்னர், நீங்கள் உங்களின் அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறை டோல் கேட்டினை கடக்கும் போதும் அதற்கான கட்டணம் உங்களின் darb அக்கவுண்டில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

இது குறித்த மேலும் தகவலுக்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்துத் துறையை 800-88888 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் அபுதாபி போக்குவரத்துதுறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!