அமீரக செய்திகள்

UAE: சாலையில் முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையே பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்குமாறு ITC வலியுறுத்தல்…

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre-ITC), அனைத்து மோட்டார் சைக்கிள் ரைடர்களும் சாலையில் செல்லும் போது, முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையே எப்போதும் போதுமான பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு மையத்தின் போக்குவரத்து பாதுகாப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், எமிரேட்டின் சாலைப் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து கவனமாகவும் பொறுப்புடனும் வாகனம் ஓட்டுமாறு சாலைப் பயனர்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பாக, சாலையில் நீங்கள் பின்தொடரும் வாகனத்திற்கு இடையேயான தூரம் குறைந்தபட்சம் மூன்று-வினாடி இடைவெளி இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

மூன்று வினாடி விதி என்பது, உங்களுக்கும் முன்னால் செல்லும் வாகனத்துக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகரிக்கும், இது அபாயத்தை அடையாளம் கண்டு பாதுகாப்பாக பதிலளிப்பதற்கு தேவையான நேரத்தை உங்களுக்கு வழங்க உதவும் என்று கூறப்படுகிறது.

இது ஒரு பைக் ஓட்டுபவர் அல்லது வாகன ஓட்டி அவருக்கு முன்னால் விட்டுச் செல்ல வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பான தூரம் ஆகும். அதேசமயம், போக்குவரத்து சட்ட அமலாக்க அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு கார்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை வைத்திருப்பது மட்டுமல்லாமல், சாலைகளில் வேக வரம்புகளைக் கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

சாலைகளில் வரம்பை மீறிய அதிவேகம் மற்றும் டெயில்கேட்டிங் அல்லது வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்காதது போன்றவை அமீரக போக்குவரத்து சட்டத்தின் படி, தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!