கால்பந்தாட்ட ரசிகர்களே.. தொடங்கியாச்சு FIFA உலக கோப்பை – கத்தார் 2022 க்கான டிக்கெட் விற்பனை..!!
உலகமே பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் FIFA உலகக் கோப்பை 2022 இந்த ஆண்டின் இறுதியில் கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பையை நேரில் கண்டு ரசிக்க உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனையை கத்தார் புதன்கிழமை தொடங்கியுள்ளது.
இந்த உலகக் கோப்பை போட்டியானது நவம்பர் 21, 2022 இல் தொடங்குகிறது. இறுதிப் போட்டி டிசம்பர் 18, 2022 அன்று நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெறும் இந்த உலக கோப்பை கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு சிறந்த தருணத்தை தரவிருக்கின்றது.
கால்பந்து ரசிகர்களும் இந்த உலக போப்பையை காண விரும்பும் நபர்களும் இப்போது தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதன் ஆரம்ப விலை USD 70 ஆக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. மறுபுறம், கத்தாரில் வசிப்பவர்களுக்கு, நான்காவது வகை இருக்கைகளுக்கான மலிவான டிக்கெட்டின் விலை USD 11 (40 திர்ஹம்) ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
கால்பந்து உலக நிர்வாகக் குழுவான ஃபிஃபா, சர்வதேச ரசிகர்களுக்கு தனிப்பட்ட போட்டி டிக்கெட்டுகளை $69 (253 திர்ஹம்)க்கு வழங்குகிறது. இது 2018 ம் ஆண்டு ரஷ்யாவில் நடத்தப்பட்ட FIFA உலக கோப்பைக்கான டிக்கெட்டுன் விலையை விட மூன்றில் ஒரு பங்கு குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டின் விலை $1,607 (5901 திர்ஹம்) வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் 2022 க்கான டிக்கெட் விற்பனை தொடங்கியதையடுத்து உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோர் டிக்கெட்டைக் கோலியிள்ளனர் என்று கால்பந்து உலக நிர்வாகக் குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. விற்பனை துவங்கப்பட்ட முதல் 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் கோரப்பட்டுள்ளன என்றும் அதிலும் கத்தாரில் இருந்து அதிக கோரிக்கைகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கத்தாரைத் தொடர்ந்து அர்ஜென்டினா, மெக்சிகோ, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, இந்தியா, சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. டிசம்பர் 18ஆம் தேதி லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு 1,40,000க்கும் அதிகமான டிக்கெட்டுகளும், தொடக்கப் போட்டிக்கு 80,000 டிக்கெட்டுகளும் கோரப்பட்டுள்ளன.
பிப்ரவரி 8 ஆம் தேதி தோஹா நேரப்படி மதியம் 1 மணிக்கு (ஐக்கிய அரபு அமீரக நேரப்படி மதியம் 2 மணிக்கு) முடிவடையும் இந்த முதல் விற்பனை காலத்தில், ரசிகர்கள் எந்த நேரத்திலும் தங்கள் டிக்கெட்டிற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்று FIFA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்க FIFA.com/tickets மட்டுமே அதிகாரப்பூர்வமான மற்றும் முறையான இணையதளம் என்பதை அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் FIFA நினைவூட்டியுள்ளது.