அமீரக செய்திகள்

UAE: இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்..!! பிக் டிக்கெட்டில் 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்ற அதிர்ஷ்டசாலி..!!

அபுதாபியில் நடைபெற்று வரும் பிக் டிக்கெட் ராஃபிள் டிராவில் இந்த முறை அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார். பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா தொடர் 251ல் கேரளாவைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் இந்த மிகப்பெரும் பரிசுத்தொகையை வென்றிருக்கிறார்.

இவர் கடந்த ஏப்ரல் 13 அன்று 048514 என்ற அவரது வெற்றிக்கான டிக்கெட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. டிராவில் அவர் வெற்றி பெற்றதையடுத்து, நிகழ்ச்சி தொகுப்பாளரான ரிச்சர்ட் அவரை உள்ளூர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின் அவர் அளித்திருந்த மற்றொரு எண்ணான இந்திய தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசும் போது அவர் சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் பிக் டிக்கெட் வெற்றி பெற்றதை அறிந்ததும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரிச்சர்ட் அவரிடம் பேசும் போது நிகழ்ச்சி தொகுப்பாளரின் புகழ்பெற்ற குரலை அங்கீகரித்து, குமார் “இது மிஸ்டர் ரிச்சர்ட் என்று நான் நினைக்கிறேன். நான் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறேன். அதனால் நான் அடைந்துள்ள மகிழ்ச்சியை சத்தம் போட்டு வெளிப்படுத்த முடியாது. நான் அபுதாபி செல்லும் வழியில் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் குமார் வெற்றி பெற்ற தனது 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை தனது மற்ற இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளார்.

பொதுவாக பிக் டிக்கெட்டில் வெற்றி பெறும் நபர்களில் இந்தியர்களே முதலிடம் வகிக்கின்றனர். அதிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவைச் சேர்ந்தவர்களே அதிகளவு வெற்றியும் பெற்றிருக்கின்றனர். தற்பொழுது மீண்டும் கேரளாவைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவரே வெற்றியும் பெற்றிருக்கிறார்.

மேலும் முதல் முறையாக இந்த மாதம் பிக் டிக்கெட்டானது தனித்தனியாக 100 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு 100 பரிசுகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று (மே 3) நடைபெற்ற டிராவை அடுத்து வரும் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் ரேஃபிள் டிரா தொடர் 252ல் வெற்றி பெறுபவருக்கு 20 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை வழங்கப்படும் என பிக் டிக்கெட் தெரிவித்துள்ளது. அத்துடன் மே 31 வரை, இதற்கான டிக்கெட்டுகளை பிக் டிக்கெட் இணையதளமான www.bigticket.ae மூலமாகவோ அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள கடைகளில் உள்ள கவுண்டர்களைப் பார்வையிடுவதன் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!