UAE ரமலான் 2022: 20,000 பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!! ஷார்ஜா கோஆப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!
அமீரகத்தில் வரவிருக்கும் ரமலானை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள், மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி என அனைத்தும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக ரமலான் மாதத்தை முன்னிட்டு மக்கள் வாங்கும் பொருட்களின் விலைகளை 90 சதவீதம் வரை குறைக்க ஷார்ஜா கோஆப் (sharjah coop) முடிவு செய்துள்ளது. இதற்காக 30 மில்லியன் திர்ஹம் ஒதுக்குவதாகவும் அது அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு சலுகையில் 20,000 பொருட்கள் வரை அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா கோஆப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மஜித் சலிம் அல் ஜுனைத், ரமலான் மாதத்தில் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் மீதான நிதிச் சுமைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த சலுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு சலுகைகள் ரமலான் மாதத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கும் என்றும், அனைத்து அடிப்படை நுகர்வோர் பொருட்களுக்கும் 90 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி விகிதங்களுடன் விறகப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு நான்கு வகையான ரமலான் பேஸ்கட் (ramdan basket) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 49 திர்ஹம் முதல் 399 திர்ஹம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 50 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி விலையில் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு பொருட்களை அவை கொண்டிருக்கும் எனவும் கூடைகளில் அரிசி, சர்க்கரை, மாவு, எண்ணெய்கள், போன்ற அடிப்படை பொருட்கள் அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கார், வீட்டு ஃபர்னிச்சர், சமையலறை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் பரிசு அட்டைகளுக்கான ரேஃபிள் டிராக்களும் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
அந்த டிராவில், ஒரு நபருக்கு சொகுசு கார், 15 வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு வெற்றியாளருக்கும் 10,000 திர்ஹம்கள் மதிப்புள்ள வீட்டு ஃபர்னிச்சர்கள், 15 வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு வெற்றியாளருக்கும் 5,000 திர்ஹம்கள் மதிப்புள்ள சமையலறை பொருட்கள் மற்றும் உபகரணங்கள், 100 வெற்றியாளர்களுக்கு 500 திர்ஹம் மதிப்புள்ள பரிசு அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.