அமீரக செய்திகள்

துபாய்: புத்தாண்டு வான வேடிக்கை நிகழ்வுகளை கடலுக்கு நடுவில் கண்டு களிக்க விருப்பமா?? மறக்க முடியாத அனுபவத்தை தரவிருக்கும் கடல் பயணம்..!!

புத்தாண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டிற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் வரிசை கட்டிக்கொண்டு காத்துக்கிடக்கின்றன. குறிப்பாக துபாயில் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் பல்வேறு பகுதிகளில் வான வேடிக்கை, களை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தேறும். இந்நிலையில், துபாயில் நடைபெறும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளை கடலுக்கு நடுவில் கண்டு களிக்க ஒரு அற்புத வாய்ப்பை வழங்குகிறது துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA).

அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வரும் 2021 ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கண்கவர் வான வேடிக்கைகளை துபாய் ஃபெர்ரி, வாட்டர்பஸ் அல்லது ஆப்ராவில் பயணித்த படியே கடலுக்கு நடுவில் இருந்துகொண்டு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் வாட்டர்ஃபிரண்டின் ஒரு அழகான சுற்றுப்பயணத்தின் போது புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா (Burj Khalifa), கண்கவர் புர்ஜ் அல் அரப் (Burj Al Arab) மற்றும் ஆடம்பரமான அட்லாண்டிஸ் (Atlantis) ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கக்கூடிய திகைப்பூட்டும் வான வேடிக்கை காட்சிகளைப் பார்ப்பது பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களை தரும்” என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கடல் போக்குவரத்து இயக்குநர் முகமது அபுபக்கர் அல் ஹஷ்மி அவர்கள் கூறியுள்ளார்.

நேரம்

  • துபாய் ஃபெர்ரி பயணங்கள் (Dubai Ferry cruises) டிசம்பர் 31 வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் தொடங்கி அதிகாலை 1.30 மணி வரை தொடரும்.
  • வாட்டர் பஸ் (water bus) மற்றும் ஆப்ரா (Abra) பயணங்கள் இரவு 10.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும்.

கட்டணம்

  • ஏர் கண்டிஷனிங் ஆப்ரா, தனது புத்தாண்டு பயணத்தை மெரினா மால் நிலையத்திலிருந்து (துபாய் மெரினா) தொடங்கும். இதற்கான கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு 125 திர்ஹம் வசூலிக்கப்படும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் ஏதுமில்லை.
  • துபாய் ஃபெர்ரி பயணங்கள் மெரினா மால் நிலையம் (துபாய் மெரினா), குபைபா நிலையம் (துபாய் க்ரீக்) மற்றும் ஷேக் சயீத் சாலை நிலையம் (துபாய் நீர் கால்வாய்) ஆகியவற்றிலிருந்து தொடங்கும். கட்டணமாக சில்வர் கிளாஸ்ஸிற்கு 300 திர்ஹம் மற்றும் கோல்ட் கிளாஸ்ஸிற்கு 450 திர்ஹம் வசூலிக்கப்படும். 2 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அழைத்து செல்லலாம்.
  • ஜதஃப் ஸ்டேஷன் (Jaddaf Station), துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி ஸ்டேஷன் (Dubai Festival City Station) மற்றும் குபைபா ஸ்டேஷன் (Ghubaiba Station) ஆகியவற்றிலிருந்து ஒரு நபருக்கு 125 திர்ஹம் கட்டணம் மற்றும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம் என்ற அடிப்படையில் ஆப்ரா தனது பயணத்தை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!