அமீரக செய்திகள்

அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்காக கோல்டன் பென்சன் திட்டம் அறிமுகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் National Bonds நிறுவனமானது, குடியிருப்பாளர்களுக்கான நிதித் திட்டமிடலை மேம்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் வகையான தங்க ஓய்வூதியத் திட்டத்தை (gold pension scheme) அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி சேமிப்பு மற்றும் முதலீட்டு நிறுவனமான இது, முதலாளிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்து அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

இந்த முயற்சி, அதன் ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு, சிறந்த திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் ஓய்வூதியத் திட்டத்தை “ஒரு நேர்மறையான முயற்சி” என்று விவரித்துள்ளனர். மேலும் இது ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படலாம் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் பல நிறுவனங்களை இந்தத் திட்டத்தைப் பின்பற்ற ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகைகளையும் அவர்கள் பரிந்துரைத்தனர். இதில் பணியாளர்கள் குறைந்தபட்சம் மாதம் 100 திர்ஹம் பங்களிக்கலாம் மற்றும் சேமிக்கப்பட்ட தொகையில் லாபம் ஈட்டலாம் என கூறப்பட்டுள்ளது. இது அவர்களின் நிறுவனங்களால் வழங்கப்படும் கிராஜுவிட்டியுடன் கூடுதலாகப் பெறப்படலாம்.

இத்திட்டம் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை ஆதரிப்பதோடு, சேவையின் முடிவில் நிதிநிலைகளைத் திட்டமிடுவதற்கு அவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

National Bonds குழு தலைமை நிர்வாக அதிகாரி முகமது காசிம் அல் அலி கூறுகையில், மக்கள் நிதி ரீதியாக ஸ்திரமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்ய ஓய்வூதிய திட்டமிடல் மிகவும் முக்கியமானது. இன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் வசிக்கின்றனர். குறிப்பாக தனியார் துறைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த முதல்-வகையான முன்முயற்சியின் மூலம், வெளிநாட்டவர்கள் தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ளும் உத்தியுடன் இருக்கவும் ​​அவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்யவும் உதவ விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஐக்கிய அரபு அமீரகத்தை வேலைவாய்ப்புக்கான விருப்பமான நாடாக மாற்றுவதற்கான தலைமையின் பார்வைக்கு இணங்க, இந்தத் திட்டம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சேவை முடிவடையும் நிதிகளில் முதலீடு செய்ய உதவுகிறது, இதனால் அவர்கள் தங்கள் கிரேஜூட்டியில் (gratuity) கூடுதல் வருமானத்தைப் பெறலாம்” என்றும் கூறியுள்ளார்.

National Bonds-ன் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த ஓய்வூதிய திட்டத்தை அமீரகத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!