துபாய்: இந்த வார இறுதியில் துவங்கும் “மூன்று நாள் சூப்பர் சேல் விற்பனை”.. 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கும் ஷாப்பிங் மால்கள்..!!
துபாய் நகரம் முழுவதும் உள்ள முக்கிய வணிக வளாகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான மூன்று நாள் சூப்பர் சேல் விற்பனையானது, வரும் மே 27 ம் தேதி தொடங்கப்பட்டு மே 29 ம் தேதி வரை நடைபெறும் என்று துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை நிறுவனம் (DFRE) அறிவித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் இந்த மூன்று நாள் சூப்பர் சேல் விற்பனை நிகழ்வானது, துபாய் நகரம் எங்கும் உள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், அழகு சாதன பொருட்கள் மற்றும் பிற குறிப்பிட்ட பொருட்களின் தேர்வில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு 90 சதவீதம் வரை சேமிப்பை வழங்கும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கின் கேர், மேக் அப் சாதனங்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றில் 75 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும்.
அற்புதமான சலுகைகள் முதல் கேஷ் பேக் புரமோஷன்கள் மற்றும் மதிப்புமிக்க பரிசுகள் வரை இந்த மூன்று நாட்கள் நடக்கவுள்ள சூப்பர் சேல் விற்பனை தேதிகளில் ஷாப்பிங் செய்பவர்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளின் மீது அற்புதமான டீல்களைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை நிறுவனம் கூறியுள்ளது.
துபாயின் முக்கிய ஷாப்பிங் மால்களான மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மிர்திஃப், சிட்டி சென்டர் அல் ஷிந்தகா, சிட்டி சென்டர் மெய்செம், மை சிட்டி சென்டர் அல் பர்ஸா, தி துபாய் மால், துபாய் மெரினா மால், துபாய் ஹில்ஸ் மால், மெர்காடோ மால், டவுன் சென்டர் ஜுமேரா, இப்னு பட்துதா, டிராகன் மார்ட் 1, டிராகன் மார்ட் 2, சர்க்கிள் மால், தி பாயின்ட், நக்கீல் மால் மற்றும் DIFC இல் உள்ள கேட் அவென்யூ உள்ளிட்ட துபாயின் அனைத்து முக்கிய ஷாப்பிங் மால்களிலும் இந்த மூன்று நாள் சூப்பர் சேல் விற்பனை நடைபெறும் எனவும் DFRE கூறியுள்ளது.