அமீரக செய்திகள்

UAE: கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்..!! சமூக வலைதளங்களில் வைரலான காணொளி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வடக்கு பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த கன மழையின் காரணமாக நான்கு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமீரகத்தின் கோர்ஃபக்கனுக்கு (Khor Fakkan) அருகிலுள்ள வாடிஷைஸில் (Wadi Shees) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த வாகனங்களை ஓட்டி வந்த நான்கு அமீரக குடிமக்களும் வாகனங்களில் இருந்து வெளியே குதித்து தப்பித்துக் கொண்டதாகவும், அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கித்தவித்த நபர்களைக் காக்க ஷார்ஜா காவல்துறையினர் உதவிக்கு வந்ததாகவும் வெள்ளநீரில் அவர்களது வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா ஆகியவற்றின் சில பகுதிகளில் பனிமூட்டமாக இருப்பதால் தேசிய வானிலை மையம் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்கள் ஓட்டும் போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று (திங்கள்கிழமை) ஷார்ஜாவில் கோர் ஃபக்கான் மற்றும் வாடி ஷீஸ் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ததாகவும், ராஸ் அல் கைமாவில் வாடி அல் எஜிலி, புஜைராவில் மசாபி மற்றும் ஷார்ஜாவில் அல் ரபீசா அணை ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் அமீரகத்தில் சில கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!