அமீரக செய்திகள்

UAE ரமலான் 2022: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!! விற்பனை நிலையங்களின் தள்ளுபடி விபரங்கள் அனைத்தும் உள்ளே…!!

ரமலான் இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்கியுள்ளனர்.

பொருட்களுக்கு உண்டான விலைகள் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்ட நிலையில், ரமலான் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ள சில முக்கிய சில்லறை விற்பனையாளர்களான யூனியன் கோஆப், ஷார்ஜா கோஆப், அல் மாயா சூப்பர் மார்க்கெட், அமேசான், நூன், தனூப் ஹோம்ஸ், பான் எமிரேட்ஸ் மற்றும் பிறவற்றின் தள்ளுபடி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

யூனியன் கோஆப் (union coop):

> 30,000 தயாரிப்பு பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி

> 185 திர்ஹம் மில்லியன் மதிப்பிலான பொருட்கள் தள்ளுபடிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

> இறைச்சி, கோழி, உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள், சிறப்பு ரமலான் பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் தள்ளுபடியில் அடங்கும்

> தள்ளுபடி மார்ச் 13 முதல் மே 3 வரை நடைபெறுகிறது

> 52 நாள் வழங்கப்படும் தள்ளுபடி அதன் 23 கிளைகள், 4 வணிக மையங்கள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கப்பெறும்

ஷார்ஜா கோஆப் (Sharjah coop):

> 20,000 தயாரிப்புகளுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கப்படும்

> பொருட்களின் விலை தள்ளுபடிக்காக 30 மில்லியன் திர்ஹம் ஒதுக்கப்பட்டுள்ளது

> சிறப்புச் சலுகை விற்பனையானது ரமலான் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கும்

> 4 வகையான பொருட்கள் அடங்கிய ரமலான் பாஸ்கட் 49 முதல் 399 திர்ஹம் வரையிலான விலைகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

> கார், ரொக்கப் பரிசு, வீட்டு ஃபர்னிச்சர்கள் போன்றவற்றிற்கான ரேஃபிள் டிரா பரிசுகளாக வழங்கப்படும்

அல் மாயா சூப்பர் மார்க்கெட்(al maya super market):

> பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி

> ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மாயாவின் 50 சூப்பர் மார்கெட் அனைத்திலும் தள்ளுபடி வழங்கப்படும்

> ரமலான் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல்வேறு பொருட்கள் அடங்கிய ரமலான் பாஸ்கட் அறிமுகப்படுத்தப்படும்

அமேசான்

> 30 க்கும் மேற்பட்ட தயாரிப்பு வகைகளுக்கு 50% வரை தள்ளுபடி

> 10 நாள் நடைபெறும் தள்ளுபடி பிரச்சாரம் மார்ச் 18 அன்று தொடங்கியுள்ளது

> தயாரிப்பு வகைகளில் மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், சமையலறை, வீடு, ஃபேஷன், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் போன்றவை அடங்கும்.

> Samsung, Philips, Black+Decker, Hugo Boss, Revlon போன்ற உலகளாவிய பிராண்டுகளில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

> தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் வங்கிகளின் கிரெடிட் கார்டுகளில் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படும்

நூன் (noon):

> பொருட்களுக்கான விலையில் 70% வரை குறைப்பு

> தள்ளுபடி பிரச்சாரம் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும்

> தள்ளுபடி எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், மளிகை பொருட்கள், கண்ணாடிகள், தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பிற தயாரிப்புகளை உள்ளடக்கும்

> Samsung, MI, Lego, Home Box, L’Oreal, Black+Decker போன்ற பெரிய பிராண்டுகள் தள்ளுபடி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

கேரிஃபோர் (Carrefour):

> 50% வரை பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் 

> தள்ளுபடியானது மளிகை பொருட்கள், புதிய உணவு, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கியது

தனூப் ஹோம் (Danube home):

> 80% வரை பொருட்களுக்கு தள்ளுபடி

> 20,000 பொருட்கள் விற்பனைக்கு தள்ளுபடிக்காக விற்பனை நிலையங்களில் கிடைக்கப்பெறும்

> பல்வேறு அளவிலான வீட்டு அலங்காரம் மற்றும் பிற பொருட்கள் விற்பனையின் ஒரு பகுதியாகும்

> Mad Red விற்பனையின் ஒரு பகுதியாக மார்ச் 31 வரை ஆன்லைனில் 90% வரை தள்ளுபடி

> 8,000 தயாரிப்புகள் ஆன்லைன் விற்பனையின் ஒரு பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது

> ஆன்லைன் விலைகள் 1 திர்ஹமில் இருந்து தொடங்கும்

பான் எமிரேட்ஸ் (Pan Emirates):

> பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி

> 15,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

> அத்தியாவசியப் பொருட்கள், படுக்கை, விரிப்புகள் மற்றும் தரைவிரிப்புகள், சுவர் அலங்காரம், வீட்டு வாசனை திரவியங்கள், அலங்கார பாகங்கள் போன்றவை இதில் அடங்கும்.

ஷரஃப் DG (Sharaf DG):

> பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி  வழங்கப்படும்

> தள்ளுபடி பொருட்களில் சமையலறை உபகரணங்கள், வீட்டு அலங்காரம், பரிசு பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிற அடங்கும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!