வளைகுடா செய்திகள்

அமீரகத்தைப் போன்று கத்தாரிலும் அமலுக்கு வரும் புதிய விதிமுறை..!! வாகன ஓட்டிகள் இனி தப்பிக்கவே முடியாது..!!

வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிந்துள்ளனரா மற்றும் மொபைல் ஃபோன்களை உபயோகிக்கின்றார்களா என்பதை அறியும் புதிய ரேடார் கருவிகளானது சாலைகளில் பொருத்தப்பட உள்ளது என கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நவீன ரேடார் தொழில்நுட்பமானது, கண்காணிப்பு கேமராக்களுடன் இணைந்து வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்கின்றனரா என்பதை கண்டறியும் திறன் உடையது.

வாகன ஓட்டிகளின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் ரேடார் தொழில்நுட்பமானது செப்டம்பர் மூன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களுக்கு 500 ரியால் ($137) அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கத்தாரின் உள்துறை அமைச்சகம் கூறும் பொழுது, “வாகனம் ஓட்டும்போது மொபைல் போனை பயன்படுத்துவது என்பது நமக்கு மட்டுமல்லாமல் நமக்கு எதிரில் வருபவர்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாகும். அதையும் மீறி சில ஓட்டுனர்கள் செல்போனை தொடர்ந்து உபயோகிப்பதால் இந்த ரேடார் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருகின்றது” என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தொழில்நுட்பமானது வாரத்தின் ஏழு நாட்களுக்கும் தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு ரேடார் கண்காணிப்பு குறித்த விழிப்புணர்ச்சியானது ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஆரம்பித்து செப்டம்பர் 3 வரை அளிக்கப்படும் எனவும், அதன் பிறகு அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கீழ்கண்ட விதி மீறல்களுக்கான அபராதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 500 ரியால் அபராதம்
வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் 500 ரியால் அபராதம். எனவே, அபராதத்தை கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயல்படுமாறு கத்தார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!