அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ர்: டிரக், லேபர் பஸ் அபுதாபியில் நுழைவதற்கு தடை விதித்த காவல்துறை..!!

ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு அபுதாபி மற்றும் அல் அய்ன் சாலைகளில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், கனரக லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த நாளில் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து சீரானதாகவும் இருக்கவும், மே 2, 2022 திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் மதியம் வரை இந்த தடை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

அபுதாபியின் நுழைவாயில்களான ஷேக் சையத் பிரிட்ஜ், ஷேக் கலீஃபா பிரிட்ஜ், முசாஃபா பிரிட்ஜ் மற்றும் அல்-மக்தா பிரிட்ஜ் உட்பட அபுதாபியின் அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களிலும் டிரக்குகளின் இயக்கத்தை தடை செய்வதற்கான முடிவு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து சாலைகளிலும் ரோந்து பணியை ஈடுபடுத்துவது மற்றும் சீரான ஓட்டத்தை வழங்க ஸ்மார்ட் அமைப்புகள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட விரிவான போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈத் கொண்டாட்டத்தின் போது அபுதாபி சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு, கனரக டிரக்குகளின் ஓட்டுநர்கள் இந்த விதியினை கடைபிடிக்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!