அமீரக செய்திகள்

வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்!! இப்போது அமீரகத்தில் புதிய வீடியோ மெஸ்சேஜை அனுப்பலாம்..!!

வாட்ஸ்ஆப் புதிதாக அறிமுகம் செய்துள்ள வீடியோ மெஸ்சேஜிங் அம்சம் தற்போது அமீரகத்தில் கிடைக்கிறது. வாட்ஸ்ஆப் பயனர்கள் இந்த புதிய அம்சம் மூலம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒரு சுருக்கமான வீடியோ மெஸ்சேஜ்களை அனுப்பலாம்.

அதாவது, நீங்கள் யாருக்கு வீடியோ மெஸ்சேஜ் செய்ய விரும்புகிறீர்களோ, அவர்களின் வாட்ஸ்ஆப் சாட்டிற்குள் சென்று அதிலுள்ள வாய்ஸ் நோட்ஸ் அனுப்பும் மைக்ரோஃபோன்  ஐகானைக் கிளிக் செய்தால், வீடியோ மெஸ்சேஜிங் ஐகான் தோன்றும். அந்த ஐகானை கீழிருந்து மேல் புறமாக தள்ளுவதன் (Swipe) மூலம், உங்களின் 60-வினாடி வரையிலான வீடியோவைப் பதிவு செய்து அனுப்பலாம்.

மேலும், இந்த உடனடி வீடியோ மெஸ்சேஜ்கள் இப்போது பெருமளவில் பேசப்பட்டு வருகின்றன. இது அருமையான 60 வினாடிகளுக்கு உங்களின் நிகழ்நேர விஷயங்களைப் பதிவு செய்து பகிர அனுமதிக்கிறது.

அதேசமயம், இவை உயர்மட்ட எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுவதால், பாதுகாப்புப் பற்றி பயனர்கள் கவலைப்பட வேண்டாம். இது பயனர்களுக்கு நேரில் உரையாடுவது போன்ற அனுபவத்தை வழங்கும்.

அதேசமயம், நீங்கள் மைக் டு கேமரா ஸ்விட்ச் செய்யும் போது, உங்கள் வீடியோ மெஸ்சேஜ் ஆடியோ இன்றி அனுப்பப்படும் என்று சந்தேகப்பட தேவையில்லை. இந்த வீடியோ ஸ்நாப்கள் தானாகவே ஒலியடக்கத்தில் இயங்கும். எனவே, நீங்கள் பேசுவதை அனைவரும் கேட்க முடியும்.

இது வெறும் வீடியோ மெஸ்சேஜ் மட்டுமல்ல, வாய்ஸ் நோட்ஸ் உடன் கூடிய வீடியோ மேஷ்-அப் என்பதால், பயனர்கள் ஒருவரையொருவர் எளிதாக தொடர்பு கொண்டு சுருக்கமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள சிறந்த அம்சமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!