அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

சவூதியில் இருந்து இந்தியாவுக்கு சென்ற குழந்தைக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி..!

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் குரங்கு அம்மை மெல்ல நுழைய தொடங்கியுள்ளது. ஏற்கனவே கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் அவர்களுடன் நாடு திரும்பிய ஒரு குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. அதனால் குழந்தையும் குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையிடம் எடுத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆந்திர மாநிலத்தில் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை வந்த விமானத்தில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. கேரளாவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை தற்போது ஆந்திராவிலும் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!